spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!!

தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்!!

-

- Advertisement -

200-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது.தெரு நாய்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடக்கம்…சமீபகாலமாக தெருநாய்களின் அட்டூழியம் பெருகிக் கொண்டே வருகின்றது. சிறுகுழந்தைகள் முதல் பெரியோா்களை வரை கடித்து வருகின்றது. இது நாளுக்கு நாள் அதிகாித்த வண்ணம் உள்ளது. இதனால் பொதுமக்கள் பொிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இதனை கட்டுப்படுத்த பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில், அரசு பல்வேறு முயற்சிகளை மேற்க்கொண்டு வருகின்றது. இந்நிலையில் இன்று காலை மதுரையில் இரு குழந்தைகளை நாய்கள் கடித்து உள்ளது. இது பொது மக்களிடையே பெரும் பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த தெருநாய்களை கட்டுப்படுத்தும் விதமாக நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் மேற்க்கொள்ளப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி முதற்கட்டமாக எடப்பாடி பகுதியில் சுற்றித்திரியும் 200-க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போடும் பணி இன்று தொடங்கப்பட்டது. கவுண்டம்பட்டி, ஹவுசிங் போர்டு, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திரியும் நாய்களுக்கு நகராட்சி நிர்வாகம் சார்பில் தடுப்பூசி போடப்பட்டது.

பொதுப்பணித் துறைக்கு ரூ.5 லட்சம் அபராதம்! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

we-r-hiring

MUST READ