நடிகர் ஹரிஷ் கல்யாண், டீசல் படம் குறித்து பேசி உள்ளார்.ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பார்க்கிங், லப்பர் பந்து ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அமைந்தது. எனவே அதைத்தொடர்ந்து வருகின்ற அக்டோபர் 17ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கும் டீசல் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்த படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். தர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இதனை தயாரிக்க திபு நினன் தாமஸ் இதன் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடித்துள்ளார். மேலும் வினய் ராய், காளி வெங்கட், அனன்யா, விவேக் பிரசன்னா, ரமேஷ் திலக் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும், டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இந்த படமும் ஹரிஷ் கல்யாணுக்கு வெற்றிப் படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் நடந்த பேட்டியில் இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி அவர், “டீசல் படம் தான் என்னுடைய கேரியரில் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். இந்த படத்தை எடுக்க இயக்குனர் ஏழு வருடங்கள் ஆராய்ச்சி செய்து பணியாற்றினார். இப்படம் கச்சா எண்ணெய் அரசியல் பற்றி பேசும். இது ஒரு ஆக்சன் படம். இந்த படத்தில் நான் மீனவனாக நடித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -