spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுகவில் அதிரடி மாற்றம்..!! பல மாவட்ட செயலாளர்களை நீக்கிய முதல்வர்..!!

திமுகவில் அதிரடி மாற்றம்..!! பல மாவட்ட செயலாளர்களை நீக்கிய முதல்வர்..!!

-

- Advertisement -

கோவை மாவட்ட திமுக செயலாளராக பதவி வகித்து வந்த கார்த்திக் அப்பதவியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

திமுக கழக அமைப்பில் 72 கழக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு அவைகளுக்கு மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு செயலாற்றி வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில்,  திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ‘உடன்பிறப்பே வா’ என்னும் முன்னெடுப்பின் கீழ் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் தற்போது திமுகவில் பல்வேறு ஒன்றிய, நகர, பகுதி செயலாளர்கள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

அதன்படி தற்போது, கோவை மாநகர் திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

we-r-hiring

அரூர் தொகுதி செயலாளர் பொறுப்பு பழனியப்பனிடமிருந்து பெறப்பட்டு ஆ.மணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக இருந்த கிரகாம்பெல் மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

MUST READ