இயக்குனர் அட்லீ, காந்தாரா சாப்டர் 1 படம் குறித்து பேசி உள்ளார்.
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதை தொடர்ந்து இவர் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களையும் இயக்கி வெற்றி கண்டார். அடுத்தது பாலிவுட்டில் கால் பதித்து ‘ஜவான்’ படத்தின் மூலம் ரூ.1000 கோடியை தட்டி தூக்கினார். அதன் பின்னர் இவர், அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட் படத்தை ஹாலிவுட் தரத்தில் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
#Atlee about #KantaraChapter1 ⭐:
“I loved Kantara..❣️ I Spoke to Rishabh.. It’s an Unbelievable film bro.. Oh my god..🔥 It has given a great Confidence to filmmakers.. I’m a very good friend of Yash sir & Rishabh..🤝 They are being an inspiration..👏”pic.twitter.com/RtBPvVGWho
— Laxmi Kanth (@iammoviebuff007) October 11, 2025

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டியில் அட்லீ, காந்தாரா சாப்டர் 1 குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், “காந்தாரா சாப்டர் 1 படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. ரிஷப் கிட்ட பேசினேன். இதை நம்பவே முடியவில்லை. ஓ மை காட், இந்த படம் ஃபில்ம் மேக்கர்ஸ்களுக்கு மிகுந்த நம்பிக்கை கொடுத்திருக்கு. நான் யாஷ் சார் மற்றும் ரிஷப் ஷெட்டிக்கு நல்ல நண்பன். அவங்க இரண்டு பேரும் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
ரிஷப் ஷெட்டியின் இயக்கத்திலும் நடிப்பிலும் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி வெளியான காந்தாரா சாப்டர் 1 திரைப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து உலகம் முழுவதும் வெற்றி நடைபோட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.