spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவினர் எங்க கட்சிக் கொடியையே பிடிக்க மாட்டாங்க..!? - செல்லூர் ராஜு

அதிமுகவினர் எங்க கட்சிக் கொடியையே பிடிக்க மாட்டாங்க..!? – செல்லூர் ராஜு

-

- Advertisement -
தொழிலதிபரை ஏமாற்றினேனா?- செல்லூர் ராஜு மறுப்பு!
Video Crop Image
அதிமுக தொண்டர்கள் எங்கள் கட்சிக் கொடியையே பிடிக்க மாட்டார்கள், இதில் மாற்றுக் கட்சியின்(தவெக) கொடியை ஏன் பிடிக்கப்போகிறார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் குமாராபாளையத்தில் கடந்த சில தினங்கலுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தார். அப்போது கூட்டத்தில் சிலர் விஜய்யின் தவெக கட்சிக் கொடியை உயர்த்திப்பிடித்து அசைத்தனர். அப்போது பேசிய பழனிசாமி, “ கொடி பறக்குது பாருங்க.. பிள்ளையார் சுழி போட்டுட்டாங்க” என்று கூறினார். அதிமுக தலைமையில் வலுவான கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக, தவெக உடனான கூட்டணி குறித்து சூசகமாக தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமியின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனங்களை கிளப்பியுள்ள நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, காட்டமாக பதிலளித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, “அதிமுக காரங்க எங்கல் கட்சிக் கொடியவே தூக்க மாட்டங்க.. இதுல அடுத்தக் கட்சிக் கொடியை பிடித்து ஆட்டுவோமா? அதிமுக தொண்டர்கள் மாற்று கட்சி கொடியை பிடித்ததாக வரலாறே கிடையாது. தவெக கொடியை தூக்கி பிடிக்கும் அளவிற்கு அதிமுகவினர் இழிபிறவிக எல்ல” என்று காட்டமாக தெரிவித்தார்.

MUST READ