மாரி செல்வராஜ் இயக்கத்தில், துருவ் விக்ரம் நடிப்பில் அக்டோபர் 17ஆம் தேதி திரைக்கு வரவுள்ள பைசன் திரைப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சி, சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.
அப்போது நடிகர் துருவ் பேசுகையில்,

“அமீர் சார் உங்களை சின்ன வயசுல இருந்தே தெரியும். ‘பருத்திவீரன்’ ரொம்ப என்ஜாய் பண்ணி பார்த்த படம் உங்களுடைய ‘பருத்திவீரன்’ படம் இந்த படத்திற்கு ஒரு ஹோம் ஒர்க் ஆக இருந்தது. வடசென்னையில் உங்களுடைய கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்க நடிப்பு ரொம்ப பிடிக்கும் இந்த படத்தில் நீங்கள் இருக்கீங்க. அது எனக்கு ஒரு ஆசீர்வாதமாக தோன்றுகிறது.
பசுபதி சார் தூள் படத்தில் எங்க அப்பாவோட வில்லனா நடித்திருந்தார் சின்ன வயசுல அவர பாக்கும்போது பயமாக இருக்கும். அப்புறம் மஜா படத்துல எங்க அப்பாவோட அண்ணனா நடிச்சீங்க. இந்த படத்துல எனக்கு அப்பாவா நடிக்கிறது ரொம்ப ஒரு சந்தோஷமா இருக்கு. நம்ம படத்தோட தூணாக நீங்க இருப்பீங்க என்று நான் நம்புறேன் சார்.
எங்க அம்மாவுக்கு நான் ஸ்கூல்ல சரியா படிக்க மாட்டேன் என்ற ஒரு ஏமாற்றம் இருக்கும் ஆனால் இந்த படம் அவங்களுக்கு பெருமையாக இருக்கும். துருவ் அப்பா சியான் என்று ஆரம்பிக்கும் பொழுது அரங்கில் கூச்சல் எதிரொலி. கஷ்டமான காட்சிகள் நடிக்கும் பொழுது என் அப்பா தான் என்னோட மனதிலும், மூளையிலும் இருப்பார். சிலர் நான் ரெண்டு வருஷம் மூணு வருஷம் வெயிட் பண்ணனு சொல்றாங்க ஆனால் மாரி செல்வராஜ் சாருக்காக நான் பத்து வருஷம் கூட வெயிட் பண்ணுவேன். மாரி செல்வராஜ் சார் இந்த படத்தை பண்ணியிருந்தால் அதை இன்னும் வேற லெவல்ல வந்திருக்கும் அவர் பண்றதுல ஒரு பத்து சதவீதம் நம்ம பண்ணாலே கரெக்டா ஆயிடும். மாரி செல்வராஜ் சார் டேக் ஓகே சொன்னாலே எனக்கு வாழ்க்கையில் ஏதோ சாதிச்ச மாதிரி இருக்கும். இதன் பிறகு உங்களுடன் எப்போ இணைய போகிறேன் என்று தெரியவில்லை ஆனாலும் அதற்காக இயங்கிக் கொண்டுதான் இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.