ரெட்ட தல படத்தின் கதை குறித்து இயக்குனர் அப்டேட் கொடுத்துள்ளார்.
அருண் விஜய் நடிப்பில் கடைசியாக ‘வணங்கான்’ திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர் ‘இட்லி கடை’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகிறது. இதற்கிடையில் அருண் விஜய், ‘மான் கராத்தே’ பட இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் ரெட்ட தல எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை பிடிஜி யுனிவர்சல் நிறுவனம் தயாரிக்க சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவருடன் இணைந்து சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி இதன் டீசரும் ரசிகர்களை கவர்ந்தது. அடுத்தது இந்த படத்தில் இருந்து முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. மேலும் இப்படம் இந்த ஆண்டு இறுதிக்குள் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்த சில தகவல்களை இயக்குனர் கிரிஷ் திருக்குமரன் சமீபத்தில் நடந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர், “தப்பு செய்யும் போது யார் பாக்குறாங்கன்னு நினைக்க கூடாது. யாரோ உங்கள பாத்துகிட்டு தான் இருப்பாங்க. அது கடவுளாகவும், காற்றாகவும், இயற்கையாகவும் கூட இருக்கலாம். நான் ஷேக்ஸ்பியரிடம் இருந்து தான் ‘ரெட்ட தல’ கதையை வாங்கி இருக்கிறேன். அதாவது தான் ஆசைப்பட்ட பெண்ணிற்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்று நினைக்கிறவன் கடைசியில் அந்த பெண் அதற்கு தகுதியானவளா? என்று யோசிக்கிறான். அது அவனுக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.