spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅல்வாவும் ஒரு வகை உணவு தான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதல்வர் பரிமாறுவார் – சேகர்பாபு...

அல்வாவும் ஒரு வகை உணவு தான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதல்வர் பரிமாறுவார் – சேகர்பாபு பதிலடி

-

- Advertisement -

எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த அல்வாவால்தான் அந்த இயக்கம் பல கோணங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அவர் அல்வா கொடுத்தார் என்பதை உணர்ந்துதான் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அல்வாவும் ஒரு வகை உணவு தான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதலமைச்சர் பரிமாறுவார்.அல்வாவும் ஒரு வகை உணவு தான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதல்வர் பரிமாறுவார் – சேகர்பாபு பதிலடி”சென்னை, பெரம்பூர் ராஜீவ்காந்தி பூங்கா அருகில் பெருநகர சென்னை மாநகராட்சியின் வார்டு உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு மையக் கட்டிடத்தினை (அங்கன்வாடி மையம்) திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா, சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி உள்ளிட்டோர் கலந்துகொண்டு திறந்து வைத்தனர். தொடர்ந்து,  செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது,

தேர்ந்தெடுக்கப்படும் அனைத்து உறுப்பினர்களின் நிதிகளும் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கும், கல்விக்கும், மழலைச் செல்வங்கள் என மக்கள் பயன்பாட்டிற்கு அந்த நிதிகளை ஒதுக்க வேண்டும் என்ற முதல்வரின் நல்ல எண்ணங்களுக்கு வண்ணம் கொடுத்துள்ளனர். கூத்தம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. செங்கல்பட்டில் 200 கோடி ரூபாய் மதிப்பில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் சென்னை பெருநகரத்திற்கு உட்பட்ட 13 பேருந்து நிலையங்களின் கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது.

we-r-hiring

திமுகவை பொருத்தவரையில் சொன்னதைத்தான் செய்கிற அரசு, செய்வதைத் தான் சொல்கிற அரசு. சொல்லாத பல வாக்குறுதிகளையும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிற அரசு. எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த அல்வாவால்தான் அந்த இயக்கம் பல கோணங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது. அவர் அல்வா கொடுத்தார் என்பதை உணர்ந்துதான் செங்கோட்டையன் போன்றவர்கள் பிரிந்து நின்று எதிர் கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அல்வாவும் ஒரு வகை உணவு தான், தேவைப்படும் இடத்தில் அதையும் முதலமைச்சர் பரிமாறுவார்.

ஆணவக் கொலைக்கு எதிராக ஆணையம் அமைத்துள்ளது வெற்று அறிக்கை என்ற வானதி சீனிவாசனின் விமர்சனம் தொடர்பான கேள்விக்கு,

2026-ஆம் ஆண்டு தமிழக முதல்வர் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறார் என்பதால் வானதி சீனிவாசனுக்கு அலர்ஜி ஏற்படுகிறது. ஆணவக் கொலைகளுக்கு என தனியாக ஆணையம் அமைக்கப்படும் என்று முதல்வர் கூறியிருக்கிறார். அந்த ஆணையத்தின் இறுதி அறிக்கையைத்தான் செயல்படுத்துவோம் என்று தெரிவித்துள்ளார். எந்த திட்டமாக இருந்தாலும் அதை திட்டமிட்டு நிறைவேற்றுகிறவர் தமிழக முதல்வர். தெருக்களின் பெயரில் இருக்கிற ஜாதிய அடையாளங்களை மாற்றுவது தொடர்பான வழக்கு வந்தபோது நீதிமன்றமே முதல்வரின் முயற்சியைப் பாராட்டி இருக்கிறது. பலதரப்பட்ட மக்களின் பாராட்டை பெரும் முதல்வர் வானதி சீனிவாசனின் பாராட்டை பற்றி கவலைப்படவில்லை” என அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளாா்.

‘கும்கி 2’ பட டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி…. எத்தனை மணிக்குன்னு தெரியுமா?

MUST READ