spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'கும்கி 2' பட டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி.... எத்தனை மணிக்குன்னு தெரியுமா?

‘கும்கி 2’ பட டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி…. எத்தனை மணிக்குன்னு தெரியுமா?

-

- Advertisement -

கும்கி 2 படத்தின் டீசர் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.'கும்கி 2' பட டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி.... எத்தனை மணிக்குன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவில் கிங், மைனா, கயல், தொடரி ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரபு சாலமன். இவருடைய இயக்கத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘கும்கி’. இந்த படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்க லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படமானது விக்ரம் பிரபுவிற்கும், அவர் வளர்க்கும் யானைக்கும் இடையிலான பாசப்பிணைப்பை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. படத்தில் காதல், எமோஷனல் ஆகியவை காட்டப்பட்டிருந்தன. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.'கும்கி 2' பட டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி.... எத்தனை மணிக்குன்னு தெரியுமா? இதைத்தொடர்ந்து பல வருடங்கள் கழித்து இயக்குனர் பிரபு சாலமன் கும்கி 2 திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நடிகர் மதி ஹீரோவாக நடித்துள்ளார். இவருடன் இணைந்து ஸ்ரிதா ராவ் நடித்துள்ளார். மேலும் அர்ஜுன் தாஸ் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இப்படத்தை பென் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். எம். சுகுமார் இதன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் 2025 நவம்பர் 14ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியான நிலையில் அடுத்தது இந்த படத்தின் டீசரை படக்குழு வெளியிட இருக்கிறது.'கும்கி 2' பட டீசரை வெளியிடும் விஜய் சேதுபதி.... எத்தனை மணிக்குன்னு தெரியுமா? அதன்படி இன்று (அக்டோபர் 18) மாலை 4 மணி அளவில் இப்படத்தின் டீசரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த டீசர் நேற்று (அக்டோபர் 17) திரையரங்குகளில் வெளியான ‘டியூட்’ படத்தின் இன்டெர்வெலின் போது ஒளிபரப்பப்பட்டுள்ளது. இந்த டீசருக்கு நடிகர் சசிகுமார் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ