டிமான்ட்டி காலனி 3 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் கிடைத்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் அருள்நிதி நடிப்பில் கடைசியாக ‘ராம்போ’ திரைப்படம் வெளியானது. இதற்கிடையில் இவர், டிமான்ட்டி காலனி 3 திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதாவது கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியிருந்த ‘டிமான்ட்டி காலனி’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து 2024 இல் வெளியான ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. எனவே இதன் அடுத்த பாகத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் பலரும் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னரே தொடங்கி ஜப்பான் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்த நிலையில், தற்போது சென்னையில் சில முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக புதிய தகவல் கிடைத்துள்ளது. அதே சமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆகையினால் இன்னும் சில நாட்களில் இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விடும் என நம்பப்படுகிறது.
மேலும் இந்த படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அஜய் ஞானமுத்து இயக்கும் ‘டிமான்ட்டி காலனி 3’ படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும், கோல்ட் மைன் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. இந்தப் படத்தில் அருள் நிதியுடன் இணைந்து பிரியா பவானி சங்கர், மியா ஜார்ஜ், விஜே அர்ச்சனா மற்றும் பலர் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


