அட்லீ இயக்கும் பிரம்மாண்ட பட்ஜெட் படத்தின் படப்பிடிப்பில் துல்கர் சல்மான் பட நடிகை இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இயக்குனர் அட்லீ தமிழ் சினிமாவில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அடுத்தது இவர் பாலிவுட்டிலும் கால் பதித்து ஜவான் என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கினார். தற்போது இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் ஹாலிவுட் தரத்தில் சயின்ஸ் பிக்சன் படமாக தயாராகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்கிறார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்புகளும் மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் தீபிகா படுகோன் இணைந்து இருப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. அதை தொடர்ந்து தற்போது ‘சீதாராமம்’ பட நடிகை மிர்ணாள் தாகூர் இந்த படத்தின் படப்பிடிப்பில் இணைந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தவிர தற்போது மும்பையில் நடக்கும் படப்பிடிப்பை முடித்த பின்னர் படக்குழு வெளிநாடுகளுக்கு சென்று படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.


