சூர்யா 46 படம் குறித்து தயாரிப்பாளர் அப்டேட் கொடுத்துள்ளார்.
சூர்யா நடிப்பில் கடைசியாக ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கருப்பு’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் சூர்யா அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் மூலம் கவனம் பெற்ற வெங்கி அட்லுரி இயக்கத்தில் தனது 46வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. தற்காலிகமாக சூர்யா 46 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார்.
இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து மமிதா பைஜு, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படமானது ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது. இதன் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கி ஐதராபாத் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இரண்டு மாதத்திற்குள் முடிக்கப்பட இருந்த இதன் படப்பிடிப்பு ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இன்னும் நிறைவடையாமல் இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர், “சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 55 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. இது ஒரு முழுமையான குடும்பப் படம். இந்த படத்தை பான் இந்திய அளவில் வெளியிட திட்டமிடவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்தாலும் தயாரிப்பாளர் சொன்ன இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


