spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமாற்றுத்திறனாளி ரசிகரிடம் அஜித் செய்த செயல்.... வைரலாகும் வீடியோ!

மாற்றுத்திறனாளி ரசிகரிடம் அஜித் செய்த செயல்…. வைரலாகும் வீடியோ!

-

- Advertisement -

நடிகர் அஜித்தின் சமீபத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.மாற்றுத்திறனாளி ரசிகரிடம் அஜித் செய்த செயல்.... வைரலாகும் வீடியோ!

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்தது ‘ஏகே 64’ படத்தில் நடிக்க உள்ளார். இதற்கிடையில் கார் பந்தயங்களில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் அஜித், தனது ரசிகர்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் தன்னை யாரும் பின்பற்ற வேண்டாம். மாற்றுத்திறனாளி ரசிகரிடம் அஜித் செய்த செயல்.... வைரலாகும் வீடியோ!உங்களுடைய குடும்பத்தையும் உடல் நலத்தையும் பாருங்கள் என்று கூறி ரசிகர்களை, அவர்களுடைய வாழ்வில் முன்னேற ஊக்கப்படுத்தி வருகிறார். மேலும் பொது இடங்களில் தன் பெயரை சொல்லி மற்றவர்களுக்கு தொந்தரவு ஏற்படுத்தக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். எனவே பொது இடங்களில் அஜித்தை காண வரும் ரசிகர்கள் தன்னை பார்த்து கூச்சலிடுவது, விசில் அடிப்பது போன்ற செயல்களை செய்தால் அவர்களை அங்கேயே சைகையால் கண்டிப்பார்.

we-r-hiring

சமீபத்தில் இது தொடர்பான வீடியோக்கள் கூட இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் நடிகர் அஜித், திருப்பதியில் சாமி தரிசனம் செய்த போது அங்குள்ள ரசிகர்கள் அஜித்தை பார்த்து தல.. தல.. என்று கூச்சலிட்டபோது சைகையால் அவர்களை அமைதிப்படுத்தினார். அதேசமயம் அங்கு மாற்றுத்திறனாளி ரசிகர் ஒருவர் அஜித்திடம் செல்ஃபி கேட்டுள்ளார். அப்போது அஜித், அவருடைய செல்போனை வாங்கி செல்ஃபி எடுத்துக் கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் அஜித்தை பாராட்டி வருகின்றனர்.

MUST READ