Homeசெய்திகள்சினிமாபிரியங்கா சோப்ரா நடித்துள்ள சீரிஸ்... ஸ்பெஷல் ஷோ பார்க்க லண்டன் பரந்த சமந்தா!

பிரியங்கா சோப்ரா நடித்துள்ள சீரிஸ்… ஸ்பெஷல் ஷோ பார்க்க லண்டன் பரந்த சமந்தா!

-

- Advertisement -

‘சிட்டாடெல்’ சீரிஸின் ஸ்பெஷல் ப்ரீமியருக்காக நடிகை சமந்தா லண்டன் பறந்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா மற்றும் ரிச்சர்ட் மேடன் நடிப்பில் ‘சிட்டாடெல்’ என்ற வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. தற்போது லண்டனில் இந்த சீரிஸின் ஸ்பெஷல் பிரீமியர் நடைபெறுகிறது. அதற்காக நடிகை சமந்தா லண்டன் பறந்துள்ளார்.

நடிகர் வருண் தவான் இயக்குனர் இரட்டையர்களான ராஜ் மற்றும் டிகே ஆகியோரும் பிரீமியரில் கலந்து கொண்டனர். பிரியங்காவின் கணவர் நிக் ஜோனாஸ் மற்றும் அவரது அம்மா டாக்டர் மது சோப்ராவும் பிரீமியரில் கலந்து கொண்டனர்.

ரஸ்ஸோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள சிட்டாடெல் சீரிஸ் ஏப்ரல் 28, அன்று வெளியாகிறது. இந்த சீரிஸ் அப்படியே இந்தியில் ரீமேக் ஆகிறது. அதில் சமந்தா மற்றும் வருண் தவான் இருவரும் தான் நடிக்கின்றனர். அதனால் தான் இருவரும் லண்டன் பறந்துள்ளனர்.

பேமிலி மேன் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டீகே கூட்டணி தான் ‘சிட்டாடெல்’ சீரிஸ் இந்திய பதிப்பையும் இயக்குகின்றனர். பேமிலி மேன் சீரிஸ் இரண்டாம் பாகத்தில் சமந்தா மிக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

MUST READ