‘சாகுந்தலம்’ படத்தின் தோல்வி குறித்து சமந்தா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் படம் வெளியாகியுள்ளது. குணசேகர் இயக்கத்தில், சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சரித்திரப் படமாக இந்த படம் உருவாகியிருக்கிறது.
இந்தியா முழுவதும் பல மொழிகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. ஆனால் படம் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. சாகுந்தலம் 10 கோடியை கூட வசூல் செய்யவில்லை. படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இந்தப் படம் ஒரு பெரிய இழப்பு ஏற்படுத்தியுள்ளது. படத்திற்கு மோசமான வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் சமந்தா வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
நாம் செய்ய வேண்டிய செயல்களை மட்டுமே நாம் செய்ய வேண்டும். அதனால் வரும் பலன் குறித்து கவலைப்படக்கூடாது. வேலைக்கான பலன் நமது நோக்கமாக இருக்க வேண்டாம். எனவே, பலன் கிடைக்கவில்லை என்றால் நாம் அந்த வேலையை சரியாக செய்யவில்லை என்றாகிவிடாது.” என்று தெரிவித்துள்ளார்.
இப்போது, சாகுந்தலம் படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தான் அவர் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளார் என்றே தெரிகிறது.
இதற்கிடையில், சமந்தா அடுத்ததாக குஷி படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டா கதாநாயகனாக நடிக்கிறார். இந்தப் படம் செப்டம்பர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது.
View this post on Instagram