இயக்குனர் மாரி செல்வராஜ், மணிரத்னம் குறித்து பதிவிட்டுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவருடைய இயக்கத்தில் வெளியான பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன், வாழை ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இவரது இயக்கத்தில் கடந்த அக்டோபர் 17ஆம் தேதி வெளியான ‘பைசன்’ திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருந்தார். மேலும் பசுபதி, அமீர், லால், அனுபமா பரமேஸ்வரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். நிவாஸ் கே பிரசன்னா இதற்கு இசையமைத்திருந்தார்.
மாரி செல்வராஜின் வலுவான திரைக்கதையிஇலல் வெளியான இந்த படம் ரூ.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றி நடைபோட்டு வருகிறது. இதற்கிடையில் ரஜினி, சேரன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் மாரி செல்வராஜையும், இந்த படத்திற்காக கடினமாக உழைத்த துருவ் விக்ரமையும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் மணிரத்னமும், மாரி செல்வராஜை பாராட்டியுள்ளார். இது தொடர்பாக மாரி செல்வராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இப்போதுதான் படம் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நீதான் பைசன். உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன். இதைத் தொடர்ந்து செய். உன் குரல் முக்கியமானது” என்று மணிரத்னம் தன்னை பாராட்டியதாக குறிப்பிட்டுள்ளார்.
Hi Mari,
Just saw the film. Liked it a lot. You are the Bison. Proud of your work. Keep it going. This voice is important.🦬
– Director Mani Ratnam
பரியேறும்பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையையும்… pic.twitter.com/JlHXUaLD3Q— Mari Selvaraj (@mari_selvaraj) October 28, 2025

அத்துடன், “பரியேறும் பெருமாளிலிருந்து என் படைப்புகள் அத்தனையும் பார்த்து கவனித்து பாராட்டி என்னை ஊக்கப்படுத்தும் உங்கள் அத்தனை வார்த்தைகளுக்கும் என் நன்றியும் பேரன்பும் எப்போதும் சார்” என்று பதிவிட்டு மணிரத்னத்துக்கு நன்றி தெரிவித்துள்ளார் மாரி செல்வராஜ்.


