spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசொன்ன தேதியில் வெளியாகுமா யாஷின் 'டாக்ஸிக்'?.... விளக்கம் கொடுத்த படக்குழு!

சொன்ன தேதியில் வெளியாகுமா யாஷின் ‘டாக்ஸிக்’?…. விளக்கம் கொடுத்த படக்குழு!

-

- Advertisement -

யாஷ் நடிப்பில் உருவாகும் டாக்ஸிக் திரைப்படம் சொன்ன தேதியில் திரைக்கு வருமா? என்பது தொடர்பாக படக்குழு விளக்கம் கொடுத்துள்ளது.சொன்ன தேதியில் வெளியாகுமா யாஷின் 'டாக்ஸிக்'?.... விளக்கம் கொடுத்த படக்குழு!

கன்னட சினிமாவில் வெளியான ‘கே.ஜி.எஃப் சாப்டர் 1’ மற்றும் ‘கே.ஜி.எஃப் சாப்டர் 2’ ஆகிய படங்களின் மாபெரும் வெற்றிக்கு பிறகு யாஷ் நடிப்பில் உருவாகும் அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பும் மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி யாஷ் தற்போது ‘ராமாயணா’ திரைப்படத்தில் ராவணனாக நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரம் எப்படி இருக்கும்? என்பதை காண ரசிகர்கள் ஆரவத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.சொன்ன தேதியில் வெளியாகுமா யாஷின் 'டாக்ஸிக்'?.... விளக்கம் கொடுத்த படக்குழு! இதற்கிடையில் யாஷ், தனது 19 ஆவது படமான டாக்ஸிக் திரைப்படத்தில் நடித்து வருகிறார். கீது மோகன்தாஸ் இயக்கும் இந்த படத்தில் யாஷின் சகோதரியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் ருக்மினி வசந்த், ஹூமா குரேஷி ஆகியோர் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்டு மும்பை, பெங்களூரு போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சொன்ன தேதியில் வெளியாகுமா யாஷின் 'டாக்ஸிக்'?.... விளக்கம் கொடுத்த படக்குழு!ஆரம்பத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு, பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பிறகு இப்படம் 2026 மார்ச் 19ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் இயக்குனருக்கும், ஹீரோவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக பல பேச்சுகள் அடிபட்ட நிலையில் இந்த படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா? என்ற சந்தேகம் எழுந்தது.

we-r-hiring

இந்நிலையில் இது தொடர்பாக படக்குழு விளக்கம் கொடுத்திருக்கிறது. அதன்படி, ‘டாக்ஸிக்’ திரைப்படம் வெளியாவதற்கு இன்னும் 140 நாட்கள் இருப்பதாக குறிப்பிட்டு, அறிவித்த தேதியில் படம் ரிலீஸ் ஆகும் என்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது.

MUST READ