இரத்த சிவப்பணுக்கள் அதிகரிக்க லிச்சி பழம் உதவுவதாக சொல்லப்படுகிறது.
ரத்த சிவப்பணுக்கள் என்பது உடலில் உள்ள திசுக்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. நம் உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்தால் ரத்த சோகை ஏற்பட்டு சோர்வு, தலைச்சுற்றல், மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனை ஏற்படும். எனவே ரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை ஏற்படாமல் தடுக்க லிச்சி பழத்தை சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் வைட்டமின் சி, நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச் சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது. இதில் உள்ள காப்பர், ரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் பி9, புதிய ரத்த அணுக்கள் உருவாக காரணமாக அமைகிறது. இதில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் செல் சேதத்தை தடுக்கிறது.

எனவே தினமும் லிச்சி பழம் சாப்பிடுவதால் ரத்த உற்பத்தி அதிகமாகும். அத்துடன் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
இது தவிர லிச்சி பழத்தை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் உடல் எடை குறையும். அதாவது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க இந்த லிச்சி பழம் பயன்படுகிறது.
இருப்பினும் ஒரு நாளைக்கு 5 முதல் 6 லிச்சி பழங்களை எடுத்துக் கொள்வது போதுமானது. காலையில் உணவுக்குப் பிறகு அல்லது மாலை நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம். சர்க்கரை நோய் இருப்பவர்கள் இதனை அளவாக எடுத்துக் கொள்வது நல்லது. இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது சிறந்தது.


