நீங்கள் அடிக்கடி ஜீன்ஸ் அணிபவரா…? பெண்களுக்கு ஏற்படும் 6 முக்கிய உடல்நலப் பிரச்சனைகள் குறித்து நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
தற்பொழுதுள்ள காலகட்டத்தில், ஜீன்ஸ் அணியாத பெண்கள் மிகக் மிகக் குறைவு என்று சொல்லலாம். கல்லூரி செல்லும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் என அனைவரும் விரும்புவது ஜீன்ஸ் ஆடையை தான். அதிலும் ஐ.டியில் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இந்த ஆடை மிகவும் பிடித்தமானதாக உள்ளது. அதுமட்டுமல்லாமல், இவ்வகையான ஆடையை அணிவதால், அவர்கள் மிகவும் ஸ்டைலாக இருப்பதாக உணா்கிறாா்கள்.
இருப்பினும்… பெண்கள் நீண்ட நேரம் இறுக்கமான ஜீன்ஸ் அணிந்தால், அவர்கள் பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனா்.

அவை என்ன மாதிரியான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை பார்க்கலாம். வெரிகோஸ் வெயின்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்:
இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் கால்கள் மற்றும் இடுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை பாதிக்கப்படுகிறது. இதனால் கால்களில் உணர்வின்மை மற்றும் வீக்கம் ஏற்படுகிறது. நீண்ட நேரம் இதுபோன்ற ஆடைகளை அணிவதால் நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக, வெரிகோஸ் வெயின்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகமாகவே காணப்படுகின்றன.
சரும பிரச்சனை:
ஜீன்ஸை இறுக்கமாக அணிவதால், சரும பிரச்சனைகள் ஏற்படுகின்றன. வியர்வை மற்றும் பாக்டீரியாக்கள் நம் சருமங்களில் தங்கிவிடுகின்றன. இது சருமத்தை எரிச்சலூட்டுவதோடு, சொறி மற்றும் பூஞ்சை தொற்றுக்கு வழிவகுக்கிறது.
நரம்புகளில் வலி:
நீண்ட நேரம் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால், இடுப்பு மற்றும் முதுகெலும்பில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது தசைகள் மற்றும் நரம்புகளில் வலியை ஏற்படுத்துகிறது. இதனால் நாள்பட்ட முதுகுவலிக்கு ஏற்பட காரணமாக அமைகிறது. நீண்ட நேரம் உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கு இது பொருந்தும்.
சிறுநீர்க்குழாய் தொற்று:
இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் வயிற்றுப் பகுதியில் அழுத்தம் ஏற்படுகிறது. சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீர்க்குழாய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன. மேலும், சிறுநீர்ப்பையில் பாக்டீரியாக்கள் வளர்ந்து சிறுநீா் பாதை நோய் (UTI) தொற்றை ஏற்படுத்தும்.
மலச்சிக்கல் பிரச்சனை:
உங்கள் வயிறு மற்றும் குடலில் இறுக்கமான ஜீன்ஸ் அணிவதால் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இது உங்களின் செரிமான பிரச்சனைக்கு வழிவகுக்கிறது. இதனால் பெரும்பாலும் நெஞ்செரிச்சல், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது.
பிறப்புறுப்பு தொற்றுகள்:
இறுக்கமான ஜீன்ஸ் அணிவது உங்கள் பிறப்புறுப்பு பகுதியில் காற்றோட்டத்தைக் குறைக்கிறது. இது வியர்வை மற்றும் ஈரப்பதத்தை அதிகரிக்கிறது. பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் போன்ற தொற்றுகளுக்கு இது வழிவகுக்கிறது. பெண்களுக்கு பிறப்புறுப்பு தொற்று மற்றும் பிறப்புறுப்பில் எரிச்சலை ஏற்படுத்துகின்றது.
மருத்துவர்கள் ஆலோசனை:
இறுக்கமான ஜீன்ஸ் அணிவது தற்காலிகமாக உங்களுக்கு ஸ்டைலாகவும், பிடித்தமானதாகவும் இருக்கலாம். இருப்பினும், நீண்ட நேரம் அணிவதால், பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். எனவே, ஜீன்ஸ் வாங்கும் போது, இறுக்கமான ஜீன்ஸ் வாங்குவதை தவிா்த்து, தளர்வான பேன்ட்களை வாங்குங்கள். வசதியான, தளர்வான ஆடைகளைத் தேர்ந்தெடுப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது. தேவைப்படும்போது மட்டுமே இறுக்கமான ஜீன்ஸ் அணியலாம், அதுவும் நீண்ட நேரம் அணியக்கூடாது என்று மருத்துவா்கள் பரிந்துரை செய்துள்ளனா்.
அடிவயிற்று தொப்பை அடியோடு கரைய எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்?


