spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அடிவயிற்று தொப்பை அடியோடு கரைய எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்?

அடிவயிற்று தொப்பை அடியோடு கரைய எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்?

-

- Advertisement -

அடிவயிற்று தொப்பை அடியோடு கரைய சாப்பிட வேண்டிய உணவு வகைகள்.அடிவயிற்று தொப்பை அடியோடு கரைய எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்?

உடற்பயிற்சி இல்லாமை, மன அழுத்தம், அதிக அளவு கொழுப்பு மற்றும் எண்ணெய் சார்ந்த உணவு வகைகளை உண்பது போன்ற பல காரணங்களால் அடிவயிற்றில் தொப்பை உண்டாகிறது. எனவே உணவை அளவாகவும், ஆரோக்கியமாகவும் எடுத்துக் கொண்டால் அடிவயிற்று தொப்பையை அடியோடு கரைக்கலாம். தற்போது எந்தெந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் தொப்பையை கரைக்க முடியும் என்பதை பற்றி பார்க்கலாம்.அடிவயிற்று தொப்பை அடியோடு கரைய எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்?

we-r-hiring

1. முட்டையில் புரதச்சத்து இருப்பதனால் அது தசை வளர்ச்சி மற்றும் கொழுப்பு கரைவதற்கு உதவி புரியும். மேலும் இது பசியை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. ஆகையினால் தினமும் முட்டை எடுத்துக் கொள்வது நல்லது. அதன்படி ஒரு நாளைக்கு இரண்டு முட்டை எடுத்துக் கொள்ளலாம்.
2. பாதாம், வால்நட், சியா விதைகள் ஆகியவற்றில் நல்ல கொழுப்புகளும், நார்ச்சத்தும் உள்ளது. இது பசியை குறைத்து எடை இழப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையினால் இதை தினமும் அளவான முறையில் எடுத்துக் கொள்வது நல்லது.அடிவயிற்று தொப்பை அடியோடு கரைய எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? 3. தானிய வகை அரிசிகளை எடுத்துக் கொள்வதன் மூலம் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும். எனவே குயினோவா மற்றும் பழுப்பு அரிசி போன்ற முழு தானியங்களை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் கொழுப்பு சேமிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. இதில் உள்ள நார் சத்துக்கள் வயிறு நிரம்பியது போன்ற உணர்வை கொடுத்து மிதமான அளவில் உணவுகளை எடுத்துக் கொள்ள உதவி செய்கிறது.
4. கீரை வகைகள், பச்சை காய்கறி வகைகள் போன்றவை உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றி வீக்கத்தை குறைக்கிறது. அதே சமயம் அதிக அளவில் சாப்பிடுவதிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.
5. அடுத்தது அவகேடோ பழங்கள் தொப்பையை குறைக்க உதவுகின்றன. இது ரத்த சர்க்கரை அளவையும் கட்டுப்படுத்தும். இந்த பழங்களை அடிக்கடி எடுத்துக் கொள்வதால் நீண்ட நேரம் வயிறு நிரம்பியது போன்ற உணர்வு ஏற்படும்.
6. ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெரி ஆகிய பழங்களும் பசியை குறைத்து, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.அடிவயிற்று தொப்பை அடியோடு கரைய எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? 7. இது தவிர முக்கியமாக ஒரு நாளைக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்று பலரும் சொல்வார்கள். அதன்படி தினமும் ஒரு ஆப்பிள் எடுத்துக்கொள்வது நல்லது. அதே சமயம் ஆப்பிள் சிடர் வினிகர் எடுத்துக் கொள்வதாலும் செரிமானம் மேம்படும். இதன் மூலம் பசி குறைந்து இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் வரும்.
8. தயிரில் புரதம் மற்றும் ப்ரோபயோடிக்குகள் அதிகம் உள்ளது. இது குடல் ஆரோக்கியத்தை பராமரித்து செரிமான பிரச்சனையை சரிசெய்கிறது.
9. கானாங்கெளுத்தி, சால்மன் ஆகிய மீன்களில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் இருப்பதால் இது வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் இது மூளையின் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.அடிவயிற்று தொப்பை அடியோடு கரைய எந்தெந்த உணவுகளை சாப்பிட வேண்டும்? 10. கிரீன் டீயில் கொழுப்பை எரிக்கும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளது. அடிவயிற்று தொப்பை உள்ளவர்கள் நாள் ஒன்றுக்கு இரண்டு கப் வரை கிரீன் டீ குடிக்கலாம்.
இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ