spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதிமுகவில் இணைந்த கையோடு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ செய்த செயல்..!

திமுகவில் இணைந்த கையோடு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ செய்த செயல்..!

-

- Advertisement -

திமுகவில் இணைந்த கையோடு மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ செய்த செயல்..!
திமுகவில் இணைந்த ஆலங்குளம் எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் இன்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார். நெல்லை மாவட்டத்திலேயே அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராக விளங்கி வருபவர் மனோஜ் பாண்டியன். பி.ஹெச்.பாண்டியனின் மகனான இவர், கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 3,700 வாக்குகள் வித்தியாசத்தில் பூங்கோதை ஆலடி அருணாவை வீழ்த்தி வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் ஓ.பென்னீர்செல்வம் அணியில் இணைந்து பணியாற்றி வந்தார். நாடார் வாக்குகள் அதிகம் கொண்ட ஆலங்குளம் தொகுதி என்பதால், அங்கு ஒவ்வொரு முறையில் திமுகவும், அதிமுகவும் மாறி மாறி கைப்பற்றை வருகின்றன. இருந்தபோதிலும் அதிமுகவின் பலமான மற்றும் செல்வாக்கான வேட்பாளாராக இருந்ததாலே மனோஜ் பாண்டியன் வெற்றி சாத்தியமானது.

we-r-hiring

இந்நிலையில் தேர்தல் நெருங்கும் சமயத்தில் எதிர்க்கட்சியின் சிட்டிங் எம்.எல்.ஏ ஒருவர் , திமுகவில் இணைந்திருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் சட்டமன்ற தேர்தலில் மனோஜ் பாண்டியனின் வருகை திமுகவிற்கு பலமாக பார்க்கப்படுகிறது. இதன்மூலம் நெல்லை மாவட்டம் ஆலங்குளம் தொகுதியில் திமுகவின் வாக்கு வங்கி கணிசமாக உயரக்கூடும் என கூறப்படுகிறது. அதேநேரம் அதிமுகவின் முக்கிய பிரமுகர் திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

இந்நிலையில் திமுகவில் இணைந்த மனோஜ் பாண்டியன் தன் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கியுள்ளார்.

 

 

 

 

 

 

 

MUST READ