இயக்குனர் வெங்கட் பிரபு தனது 50வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார்.
தமிழ் சினிமாவில் ஜாலியான இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. இவர் கலைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆரம்பத்தில் பின்னணி பாடகராக தனது பயணத்தை தொடங்கிய இவர், ஹீரோவாகவும் நடித்தார். ஆனால் அந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டது. இருப்பினும் கடந்த 2002ல் வெளியான ‘ஏப்ரல் மாதத்தில்’ படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு சில படங்ககளில் சிறிய வேடங்களில் நடித்து வந்த இவர், ‘சென்னை 600028’ என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
இந்த படம் இன்று வரையிலும் ரசிகர்களின் பேவரைட் படமாக இருக்கிறது. அதைத் தொடர்ந்து சரோஜா, கோவா, பிரியாணி ஆகிய படங்களை இவர் இயக்கியிருந்தாலும் இவருடைய இயக்கத்தில் வெளியான மங்காத்தாவும், மாநாடு திரைப்படமும் இமாலய வெற்றி பெற்றது. கடைசியாக இவர், விஜய் நடிப்பில் ‘தி கிரேட்டர்ஸ் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படத்தை இயக்கினார். அடுத்தபடியாக சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு வருகின்ற நவம்பர் 7ஆம் தேதி தனது 50வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார்.
இவருடைய இந்த பிறந்தநாள் விழாவாக கொண்டாடப்பட இருக்கிறதாம். எனவே இந்த விழாவில் கலந்துகொள்ள அஜித், விஜய் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் வெங்கட் பிரபு தரப்பில் இது தொடர்பாக அறிவிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


