ஏகே 64 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் தற்போது பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் இவரது நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைத்த நிலையில், இவருடைய அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கசக்கமாக இருந்து வருகிறது. ஏனென்றால் ‘குட் பேட் அக்லி’ படக் கூட்டணி ‘ஏகே 64’ என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள புதிய படத்தில் இணைய இருக்கிறது. இது தொடர்பாக ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே பேட்டி ஒன்றில் இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறியிருந்தார்.
அதே சமயம் நடிகர் அஜித்தும், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகும் என கூறியுள்ளார். இதற்கிடையில் இப்படம் தொடர்பான பல அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த படமானது முழுக்க முழுக்க ரசிகர்கள் ரசிக்கும்படியான பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கிறதாம். இதில் மோகன்லால், ஸ்ரீலீலா, சுவாசிகா ஆகியோர் நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், விஜய் சேதுபதி மற்றும் ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரிடமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சமீபகாலமாக பேச்சு அடிபடுகிறது.
மேலும் இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த உறுதியான தகவலும் வெளிவரவில்லை. எனவே இதன் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அல்லது ஜனவரி மாதத்திற்கு பிறகு தொடங்கும் போல் தெரிகிறது. இதன் மூலம் இந்த படத்தின் ரிலீஸும் தள்ளிப்போகுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஏனென்றால் நடிகர் அஜித், பேட்டி ஒன்றில் ‘ஏகே 64’ படம் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் திரைக்கு வரும் என்று கூறியிருந்தார். ஆனால் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகும் தகவல் என்னவென்றால், இந்த படம் 2026 தீபாவளிக்கு வெளியாக வாய்ப்பு இருக்கிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரசிகர்களுக்கு சற்று அதிருப்தியை ஏற்படுத்தினாலும், இப்படத்தை தீபாவளி திருவிழாவாக கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் இப்பொழுதே தயாராகி வருகிறார்கள்.


