spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்கசகசாவின் அற்புத பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

கசகசாவின் அற்புத பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

-

- Advertisement -

கசகசாவின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.கசகசாவின் அற்புத பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

கசகசா என்பது சிறிய அளவில் இருந்தாலும் அதில் நிறைந்துள்ள சத்துக்கள் காரணமாக இது சமையலில் மட்டுமல்லாமல் பாரம்பரிய மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. அதாவது இது உணவுக்கு ருசி தருவதோடு பல ஆரோக்கிய நன்மைகளையும் தருவதாக சொல்லப்படுகிறது.

we-r-hiring

கசகசாவில் இரும்பு, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி, வைட்டமின் இ மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் ஆகிய உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் உள்ளன.கசகசாவின் அற்புத பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

கசகசா உடலில் நரம்புகளை அமைதியாக்கும் தன்மையை கொண்டிருப்பதால் இரவு நேரத்தில் பால் அல்லது பாயாசத்தில் கலந்து குடித்தால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும். எனவே கசகசாவை மாதுளம்பழ சாற்றில் ஊறவைத்து சாப்பிட்டால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகும்.

கசகசாவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மன அழுத்தத்தை குறைத்து மன அமைதியை மேம்படுத்தும்.

இதில் உள்ள பொட்டாசியம், நார்ச்சத்து போன்றவை இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதாவது நல்ல கொழுப்புகளை அதிகரித்து கெட்ட கொழுப்புகளை கரைத்து இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.

மேலும் இதில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் எலும்புகளுக்கும், பற்களுக்கும் வலிமை தருகிறது. எனவே குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.கசகசாவின் அற்புத பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்!

அடுத்தது கசகசாவில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலை தடுக்கும். மேலும் கசகசா பேஸ்ட் பயன்படுத்தினால் சருமம் மென்மையாகும்.

இது தவிர கசகசா ஆண்மை பெருக்கத்திற்கும் உதவுகிறது. அதே சமயம் இது தாய்ப்பாலை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது.

மேலும் கோடை காலங்களில் கசகசா பானம் அருந்தினால் உடல் சூடு குறையும். வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளுக்கும் இந்த கசகசாவை பயன்படுத்தினால் நல்ல தீர்வு கிடைக்கும். இருப்பினும் இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ