spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ATM-ல் டெபாசிட் செய்யபோறீங்களா உஷார்…உங்களை பின்தொடரும் ஆபத்து…

ATM-ல் டெபாசிட் செய்யபோறீங்களா உஷார்…உங்களை பின்தொடரும் ஆபத்து…

-

- Advertisement -

டெபாசிட் இயந்திரத்தில் பணம் செலுத்தும் நபர்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை வெறும் 12 மணி நேரத்தில் காவல்துறை கைது செய்ததுள்ளனர்.

ATM-ல் டெபாசிட் செய்யபோரீங்களா மக்களே உஷார்…உங்களை பின்தொடரும் ஆபத்து…

we-r-hiring

சென்னை மண்ணடி வரதமுத்தையா தெருவை சேர்ந்தவர் அகமது அனாஸ் (39) இவர் அதே பகுதியில் அழகு சாதன பொருட்கள் கடை நடத்தி தொழில் செய்து வருகிறார். தொழில் காரணமாக தனது வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாய் பணத்தை தனது  கருப்பு பேக் ஒன்றில்  வைத்து இருசக்கர வாகனத்தில் எடுத்துக் கொண்டு  புரசைவாக்கம் பகுதியில் உள்ள பேங்க் ஆப் பரோடா (BOB) வங்கியில் 20 ஆயிரம் ரூபாய் பணத்தை டெபாசிட் செய்துள்ளார்.

மேலும் பூந்தமல்லி நெடுஞ்சாலை வழியாக வந்து பச்சையப்பன் கல்லூரி பின்புறத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு (IOB) சென்று பார்த்த பொழுது வங்கி பூட்டிய  நிலையில் இருந்த காரணத்தினால்,அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி IOB ஏ.டி.எம்.க்கு சென்று பார்த்துள்ளார். அங்கு ஏ.டி.எம் அவுட் ஆப் சர்வீஸ்  (ATM OUT OF SERVICE) என இருந்த காரணத்தினால் பணத்தை டெபாசிட் செய்யாமல் அங்கிருந்து வீட்டிற்கு புறப்பட்டுள்ளார்.

வீட்டிற்கு திரும்பும் வழியான அமைந்தகரை இந்திரா நகர் முதல் தெருவில் சென்று கொண்டிருந்த பொழுது அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரை நம்பர் பிளேட் இல்லாத இருசக்கர வாகனத்தில்  பின்தொடர்ந்து வந்து அகமது அனாஸ் கையில் வைத்திருந்த பணம் பேக்கை பிடுங்கிக் கொண்டு சென்றுள்ளனர். அப்பொழுது அகமது அனாஸ் பணத்தை பறித்தவுடன் கூச்சலிடவே அருகிலிருந்த அக்கம்பக்கத்தினர் இருசக்கர வாகனத்தில் தப்பிச்செல்ல முயன்ற நபர்களை பிடிக்க முயன்றனர்.

அடையாளம் தெரியாத அந்த நபர்கள் இருசக்கர வாகனத்தை சாலையிலேயே போட்டுவிட்டு தப்ப முயன்றனர். அப்பொழுது இருசக்கர வாகனத்தை ஓட்டிய நபர் பிடிபட்டார். வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த மற்றொரு நபர் பணம் வைத்திருந்த பேக்கை எடுத்துக் கொண்டு தப்பி சென்று விட்டார்.

இந்நிலையில் பிடிபட்ட நபரை பொதுமக்கள் அரும்பாக்கம் காவல் நிலையத்தில்  ஒப்படைத்தனர். அரும்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர்  பிடிபட்ட நபரிடம் வாகன எண் இல்லாத  சக்கர வாகனம் மற்றும் பட்டா கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்பு நடந்த சம்பவம் குறித்து அகமது அனஸ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட நபர் பெரம்பூர் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் குமார்(23) என்பதும் இந்த நபர் தற்காலிகமாக ஐ.சி.எப்.ஆர்.ஓ (ICFRO) ஆபரேட்டர் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

கார்த்திக் குமார் இடம் நடத்திய விசாரணையில், பின்னால் அமர்ந்து வந்த நபர் வியாசர்பாடி பகுதியை சேர்ந்த ஜீவா (23) என்பது தெரியவந்தது. மேலும்  விசாரணையின் ஒரு பகுதியாக சம்பவம் இடத்தில் இருந்த கருப்பு பேக் எடுத்து வந்து அகமத் அனஸ் இடம் அவருடைய பேக் தான என்பதை உறுதி செய்தனர்.

உள்ளே பணம் இல்லாததால் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிய ஜீவாவை தேடி வந்தனர். கார்த்திக்குமார் மொத்தம் நான்கு பேர் வழிப்பறியில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கார்த்திக் குமார் மற்றும் ஜீவா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் சென்று பணத்தை பறிப்பது என்பது மேலும் இரண்டு பேர் யாரேனும் அந்த பகுதியில் வருகிறார்களா என நோட்டம் பார்ப்பதற்கு என திட்டம் போட்டு கொள்ளையடிக்க இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கார்த்திக் குமார் தெரிவித்த தகவலின் அடிப்படையில் போலீசார் இந்த வழிப்பறி  சம்பவத்திற்கு நோட்டமிட்ட  எர்ணாவூர் பகுதியை சேர்ந்த தியானேஷ்வரன் (21) மற்றும் அஜித் என்பவரை கைது செய்துள்ளனர்.

அவர்கள் இருவரும் அளித்த தகவலின் பேரில் தலைமறைவாக இருந்த ஜீவாவை கைது செய்து வழிப்பறிகளில் ஈடுபட்ட பணத்தில் 60,000 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை செலவு செய்தார்களா அல்லது யாரிடமாவது கொடுத்து வைத்துள்ளார்களா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் ஹவாலா பண பரிமாற்றம் செய்யும் நபர்களிடமிருந்து பணத்தை வழிபறி  செய்யும் வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்துள்ளது. அரும்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார், நான்கு பேரையும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள ஏடிஎம் மையங்களை குறிவைத்து வழிப்பறியில் ஈடுபட்ட இந்த கும்பலை 12 மணி நேரத்தில் பிடித்தது, காவல்துறையின் விரைவான நடவடிக்கையாக பாராட்டப்படுகிறது.

பீகாரில் சங்கிகளுக்கு சாணியடி! கருத்துக்கணிப்பு மெகா மோசடி! உமாபதி நேர்காணல்!

MUST READ