4,545 வார்த்தைகளில் ‘நேரு’வின் உருவத்தை ஓவியமாக வரைந்து கரூரில் சிறுமி உலக சாதனை படைத்ததற்காக DCB வேர்ல்ட் ரெகார்ட் நிறுவனம் சான்றிதழ் வழங்கியுள்ளது.
நாட்டின் முதல் பிரதமான பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் குழந்தைகள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாளை அவரது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் கரூர் மாவட்டம் வாங்க பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக், ஆனந்தி தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளார். இந்நிலையில் அவரது மகள் பவித்ரா(10) நேரு அவர்களை கௌரவிக்கும் விதமாக, ‘நேரு’ என்ற வார்த்தை மூலம் அவரது உருவத்தை 66.5 இன்ச் உயரத்திலும், 56 இன்ச் அகலத்திலும் நேரு என்ற எழுத்தை 5 மணி நேரம் 55 நிமிடங்களில் 4,545 முறைப் பயன்படுத்தி நேருவின் உருவத்தை ஓவியமாக வரைந்து உலக சாதனை படைத்துள்ளார். இதனை டிசிபி வேர்ல்ட் ரெகார்ட்ஸ் நிறுவனம் இந்த சாதனையை உலக சாதனையாக அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து பதிவு செய்துள்ளது.
மேகதாது விவகாரம்… குடும்பத் தொழிலை காப்பாற்ற மௌனம் காத்த திமுக – எடப்பாடி பகிரங்க குற்றச்சாட்டு


