Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அல்சர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் நுங்கு!

அல்சர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் நுங்கு!

-

- Advertisement -

நுங்கு, அல்சர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தருவதாக சொல்லப்படுகிறது.அல்சர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் நுங்கு!

நுங்கில் இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, நார்ச்சத்து, புரதம் போன்றவை அடங்கியுள்ளது. இது உடல் வெப்பத்தை குறைப்பதற்கும் நீர்ச்சத்தை அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவும். இதனால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். அடுத்தது நுங்கு என்பது உடலுக்கு தேவையான ஆற்றலை தருகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. வெயில் காலத்தில் அம்மை நோய்கள் போன்ற நோய்களிலிருந்து உடலை பாதுகாக்கிறது.

we-r-hiring

ரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு என்பது அருமருந்தாக பயன்படுகிறது. நுங்கில் உள்ள அன்த்யுசைன் எனும் ரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் ஏற்படுவதை தடுக்கும்.அல்சர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் நுங்கு!

நுங்கினை கோடை காலத்தில் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. அதன்படி இது வேர்க்குரு, கொப்பளம் வராமல் தடுக்கும். மேலும் வயிற்றுப்புண், வயிற்றுப் பிரச்சனை, அசிடிட்டி ஆகியவைகளுக்கு தீர்வு தரும். குறிப்பாக நுங்குடன் தேங்காய் பால் சேர்த்து சாப்பிட அல்சர் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். எனவே தொடர்ந்து நுங்கு மற்றும் தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து மில்க் ஷேக் போன்று அடித்து பருகிவர நல்ல ரிசல்ட் கிடைக்கும். இருப்பினும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ