spot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்அருகம்புல்லின் மகத்துவங்கள்… மகிமைகள்…

அருகம்புல்லின் மகத்துவங்கள்… மகிமைகள்…

-

- Advertisement -

அருகம்புல் எல்லாவித மண்வளத்திலும் வளரும். குறுகலான நீண்ட இலைகளையும், நேராய் வளரும் தண்டுகளையும் உடைய தன்னிச்சையாய் வயல், வரப்புகள், வெட்ட வெளிகளிலும் வளரும் ஒரு புல் வகையாகும். இது சல்லிவேர் முடிச்சுக்கள் மூலமும், விதைகளின் மூலமும் இன விருத்தி செய்யப்படுகிறது. அரும்புல்லின் மருத்துவகுணங்கள் எண்ணிலடங்காதவை. அதனை இந்த பதிவில் காணலாம்.அருகம்புல்லின் மகத்துவங்கள்… மகிமைகள்…அருகம்புல் தோல் நோய்களை குணப்படுத்த கூடியது, கண் எரிச்சலை சரிசெய்யும் தன்மை கொண்டது, வயிற்றுப் போக்கை நிறுத்தக் கூடியது, புண்களை ஆற்றவல்லது. வயல்வெளி, புல்வெளியில் வளரக்கூடிய அருகம்புல்லில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. இதன் மீது நடப்பதால் உடலுக்கு புத்துணர்வு கிடைக்கிறது. நரம்பு நாளங்களை தூண்டக் கூடியது. ரத்தத்தை உறைய வைக்கும் தன்மை கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. அருகம்புல்லை பயன்படுத்தி தோல் நோய்களுக்கான மருந்து தயாரிக்கலாம்.

மருத்துவப் பயன்கள்

we-r-hiring
  • அருகம் புல் உடல் தாது வெப்பு அகற்றித் தாகம் தணிப்பானாகவும், சிறுநீர் பெருக்கியாகவும் உள்ளது. அருகம்புல்லில் நீர்விடாமல் சாறு எடுக்கவும். இதை 2 சொட்டு விடும்போது, மூக்கில் இருந்து வரும் ரத்தம் நிற்கும்.
  • அருகம்புல் சாறு 100 மில்லி அளவுக்கு குடித்து வந்தால் மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கு கட்டுக்குள் வரும்.
  • அருகம்புல், ரத்தத்தை சுத்தப்படுத்தி தோல்நோய்கள் வராமல் தடுக்கிறது. கோடை வெயிலுக்கு அருகம்புல் சாறு குடிக்கும்போது உடல் குளிர்ச்சி அடைகிறது.
  • அருகம்புல் சாறு 50 மில்லி எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் புளிப்பில்லாத கெட்டி தயிர் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை காலை, மாலை குடித்துவர வயிற்றுபோக்கு, வெள்ளைப்போக்கு சரியாகும்.

அருகம்புல்லின் மகத்துவங்கள்… மகிமைகள்…

  • கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம், மாதுளை இலை 30 கிராம் அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 50 மி.லி. அளவாக 3 மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது, மூக்கு, ஆசனவாய் இரத்த ஒழுக்கு நிற்கும்.
  • வெப்பம் தணியும், மாத விலக்குச் சிக்கல் நீங்கும்.
  • அருகம்புல்லை சிறு துண்டுகளாக வெட்டி பசையாக அரைத்து எடுக்கவும். இந்த பசையுடன் மஞ்சள் சேர்த்து நன்றாக கலக்கவும். இதை பூசுவதால் அரிப்பு, சொரி சிரங்கு, படர்தாமரை, வியர்குரு சரியாகிறது. அருகம்புல், அக்கி கொப்புளங்கள், சொரியாசிஸ்சை போன்ற தோல் நோய்களை குணப்படுத்துகிறது.
  • அருகம்புல்லை துண்டுகளாக நறுக்கி நீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் வடிகட்டி ஊறல் நீரை மட்டும் எடுக்கவும். இதனுடன் காய்ச்சிய பால் சேர்த்து காலை, மாலை குடித்துவர கண் எரிச்சல், அரிப்பு போன்றவை சரியாகும்.
  • அறிவு மிகுந்து முக வசீகரம் உண்டாகும்.
  • அருகம்புல் 30 கிராம் அரைத்துப் பாலில் கலந்து பருகி வர இரத்த மூலம் குணமடையும்.
  • ஒரு கிலோ அருகம்புல் வேரை ஒன்றிரண்டாய் இடித்து 8 லிட்டர் நீரில் இட்டு ஒரு லிட்டராக வற்றக் காய்ச்சி வடித்து ஒரு லிட்டர் நல்லெண்ணைய் கலந்து அமுக்கிராக் கிழங்கு, பூமிச் சர்க்கரைக் கிழங்கு வகைக்கு 20 கிராம் பால் விட்டு நெகிழ அரைத்துக் கலக்கிச் சிறுதீயில் பதமுறக் காய்ச்சி வடித்து எடுத்த எண்ணெயை (அறுகுத்தைலம்) கிழமைக்கு ஒரு முறை தலையில் இட்டு அரைமணி கழித்துக் குளித்து வர வாதம், பித்தம், நெஞ்சுவலி, வயிற்றெரிச்சல், உடல் வறட்சி, மூலச்சூடு, தலைவெப்பு, நீர்க்கடுப்பு ஆகியவைத் தீரும்.
  • அருகம் வேர், நன்னாரி வேர், ஆவரம் வேர்ப்பட்டை, குமரி வேர் வகைக்கு 50 கிராம் 2 லிட்டர் நீரில் போட்டு அரை லிட்டராகக் காய்ச்சி வடித்து 100 மி.லி. யாக நாளைக்கு 5 வேளை கொடுக்க மது மேகத்தால் உண்டான மோக தாகம் தணியும்.

அல்சர் பிரச்சனைக்கு உடனடி தீர்வு தரும் நுங்கு!

 

MUST READ