spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு தினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்க!

சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு தினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்க!

-

- Advertisement -

தினமும் ஒரு கொய்யா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு தினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்க!

தினமும் காலையில் ஒரு கொய்யா சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

கொய்யா பழத்தில் உள்ள வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரித்து சருமத்தின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்தி குடல் இயக்கத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் மலச்சிக்கலுக்கு தீர்வு தருகிறது. மேலும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும், உடல் எடையை குறைப்பதற்கும் பயன்படுகிறது. கொய்யாப்பழத்தில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு தினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்க!குறிப்பாக தினமும் காலையில் ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். ஏனென்றால் கொய்யாப்பழத்தில் நார்ச்சத்துக்கள் மட்டுமல்லாமல் குறைந்த அளவிலான கலோரிகள் இருக்கிறது. அதிலும் சிவப்பு கொய்யாப்பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது.சர்க்கரை கட்டுப்பாட்டுக்கு தினமும் ஒரு கொய்யா சாப்பிடுங்க!இருப்பினும் சளி, இருமல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் கொய்யாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் கொய்யாப்பழத்தை காலையில் சாப்பிடுவது தான் நல்லது. மதிய உணவிற்கு பிறகும் சாப்பிடலாம். ஆனால் இரவு நேரங்களில் சாப்பிட வேண்டாம். இது தொடர்பாக மேலும் சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

MUST READ