spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்லைஃப்ஸ்டைல்தொப்புளில் எண்ணெய் தடவுவதால் உண்டாகும் உடல் நல அற்புதங்கள்!

தொப்புளில் எண்ணெய் தடவுவதால் உண்டாகும் உடல் நல அற்புதங்கள்!

-

- Advertisement -

தொப்புளில் எண்ணெய் தடவுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

தொப்புளில் எண்ணெய் தடவுவது என்பது நம் பாரம்பரிய முறைகளில் ஒன்றாகும். இது மருத்துவ ரீதியாக முழுமையாக நிரூபிக்கப்படவில்லை என்றாலும், அனுபவரீதியாக பலரும் இதில் பல நன்மைகள் கிடைப்பதாக சொல்கிறார்கள்.தொப்புளில் எண்ணெய் தடவுவதால் உண்டாகும் உடல் நல அற்புதங்கள்!

we-r-hiring

தொப்புளில் எண்ணெய் தடவுவதால் வயிற்றுப் பகுதி மற்றும் தொப்புளை சுற்றி உள்ள தோல் சுருங்காமல், உலராமல் இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவத்திற்கு பின்னர் தோன்றும் கோடுகள் மறையும். எனவே தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயை தொப்புளை சுற்றி பயன்படுத்தலாம்.

அடுத்தது வயிற்று வலி, மாதவிடாய் வலி நீங்கும். எனவே விளக்கெண்ணையை பயன்படுத்தி தொப்புளை சுற்றி மசாஜ் செய்வதால் மாதவிடாய் வலியை சரி செய்யலாம். மேலும் ஹார்மோன் சமநிலை, மன அழுத்தம் ஆகியவைகள் தொப்புளை சுற்றி எண்ணெய் தடவுவதால் குறைவதாக சொல்கின்றனர்.

செரிமான கோளாறுகளும் இதன் மூலம் சரியாகும். அடுத்தது இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் கருவுறுதலை அதிகரிக்கவும் உதவுகிறது.தொப்புளில் எண்ணெய் தடவுவதால் உண்டாகும் உடல் நல அற்புதங்கள்!

தொப்புளில் தினமும் எண்ணெய் தேய்ப்பதால் உடல் சூடு தணியும். கண்பார்வை தெளிவாகும். குளிர் காலத்தில் உதடுகள் உலர்வது குறையும். சருமம் பளபளப்பாகும்.

எனவே தினமும் தூங்குவதற்கு முன்னால் மூன்று முதல் நான்கு துளிகள் எண்ணெய் பயன்படுத்தி மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். இது 100% பாதுகாப்பானவை.

குறிப்பு: ஆமணக்கு எண்ணெய் வயிற்று வலியை ஏற்படுத்தும். எனவே கர்ப்பிணிகளும் மற்றவர்களும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் பயன்படுத்தக்கூடாது.

MUST READ