- Advertisement -
உங்கள் கனவு வீடு அல்லது நிலம் எது வாங்கினாலும், எந்த சிக்கலுமின்றி பத்திர பதிவு செய்திட கவனிக்க வேண்டிய 16 மிக முக்கியமான விஷயங்கள் என்னென்ன என்பதைக் கீழே காணலாம்.
- உரிமை (Title) சரிபார்ப்பு
உண்மையான உரிமையாளர் தானா? அவர்கள் பெயரில் பத்திரங்கள், பட்டா, சர்வே, செல்லுபடியாகும் ஆதாரங்கள் உள்ளதா என்பதை சரிபார்க்கவும். - மூல ஆவணங்கள் (Original Documents)
Sale deed, partition deed, settlement deed, gift deed, will probate அனைத்தும் தொடர்ச்சியாக (Chain of Title) இருக்க வேண்டும். - EC (Encumbrance Certificate) – 30 ஆண்டுகள் ( minimum )
எந்த தடைகள், கடன், முதலீட்டாளர் உரிமை, வழக்கு இல்லையென்பதை உறுதி செய்யவும்.
- நிலம் / வீடு மீதான கடன் (Bank Loan)
சொத்துக்கு bank loan இருந்தால் NOC Loan closure certificate Release deed உள்ளதா பார்க்கவும்.
- பட்டா, சிட்டா, அடங்கள்
சொத்து உண்மையில் உரிமையாளர் பெயரில் பதிவாகி உள்ளதா? புலம் / வீட்டின் பயனீடு வகை என்ன?
- FMB / Field Map / Survey
எல்லைகள் சரியாக உள்ளதா? GPS survey, resurvey mismatch இல்லையா?
- Approved Plan (DTCP / CMDA / LPA)
Plot / Building approved தானா? Building plan deviation உள்ளதா?
- நத்தம், கிராமநத்தம், புறம்போக்கு — வகை சரிபார்த்து கொள்ளவும்
சட்டப்படி பதிவு செய்யக்கூடிய நிலமா? Prohibited land list-ல் இல்லையா?
- தேவையான NOC & பத்திர அனுமதிகள்
Panchayat / Municipality / Corporation Fire NOC, Pollution NOC (சில இடங்களில்), Layout approval letter.
- Property Tax, Water, Electricity Bill
அனைத்தும் vendor பெயரில் இருக்க வேண்டும். நிலுவை பாக்கி இல்லை என்பதை உறுதிசெய்யவும்.
- Road Access / Right of Way
5 அடி / 10 அடி / 20 அடி வீதி உள்ளதா? access வழி மீது தகராறு இல்லையா?
- பத்திரத்தில் குறிப்பிடப்படும் எல்லைகள்
North–South–East–West boundary சரியாக உள்ளதா? FMB உடன் பொருந்துகிறதா?
- வர்த்தக மதிப்பு / Guideline Value
சொத்தின் மார்க்கெட் விலை, Guideline value ஒப்பிட்டு சரியான விலை பேச வேண்டும்.
- Stamp Duty & Registration Charges
கட்டணங்கள் சரியா? undervalue பதிவு செய்ய முயற்சிக்க வேண்டாம் — எதிர்காலத்தில் பெரிய பிரச்சனை.
- இருதரப்பு ஒப்பந்த நிபந்தனைகள்
payment schedule handover date penalty clauses indemnity clause செய்து எழுதி ஒப்பந்தத்தில் சேர்க்க வேண்டும்.
- Lawyer Verification – மிகவும் முக்கியம்
பணம் கொடுக்கும்முன் சட்ட வல்லுநர் மூலம் அனைத்தையும் சரிபார்க்கவும். இது செலவை குறைக்கும், பிரச்சனையை தவிர்க்கும். இந்த 16 விஷயங்களையும் சரிபார்த்தால், சொத்து வாங்குவது குறைந்தபட்ச பாதுகாப்பானதாக இருக்கும்.


