ஆவடி அருகே அன்னனூரில் அடுக்குமாடி குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை மர்ம நபர் லாபகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
ஆவடி அடுத்த அன்னனூர், சிவசக்தி நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் முரளி. இவர் அவரது இரு சக்கர வாகனத்தை அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தார். இந்நிலையில், காலையில் வந்து பார்த்தபோது அவரது ஹோண்டா பைக் களவு போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை அடுத்து வீட்டில் பொறுத்திருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மர்ம வாலிபர் ஒருவர் நள்ளிரவில் குடியிருப்பில் புகுந்து யமஹா பைக்கை ஸ்டார்ட் செய்வதற்காக வயர்களை கட் செய்து வந்துள்ளார்.

நீண்ட நேரம் போராடியும் யமஹா பைக்கில் ஸ்டார்டிங் வயரை கனெக்ட் செய்ய முடியாததால், அருகே இருந்த ஹோண்டா யூனிகான் பைக்கில் ஸ்டார்டிங் ஒயரை கட் செய்து பின்னர் சைடு லாக்கை உடைத்து அங்கிருந்து லாபகமாக பைக்கை திருடி சென்றுள்ளார். இதை அடுத்து பைக்கின் உரிமையாளர் முரளி திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து, கண்காணிப்பு கேமரா உதவியுடன் மர்ம வாலிபரை காவல்துறையினா் தீவிரமாக தேடி வருகின்றனா். முதலில் யமஹா பைக்கை திருட முயன்ற மர்ம நபர் நீண்ட நேரம் போராடியும் ஸ்டார்டிங் ஒயரை கட் செய்ய முடியாததால் அங்கிருந்த ஹோண்டா பைக்கை போராடி திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெஷல் அப்டேட் லோடிங்…. ‘ஜனநாயகன்’ படக்குழு வெளியிட்ட அறிவிப்பு!


