விஜயின் வக்கிரமான புத்தியின் காரணமாக முதலமைச்சரை அங்கிள், சார் என்று பேசியுள்ளார் என மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


காஞ்சிபுரம் மக்கள் சந்திப்பில் விஜய் பேசியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- தவெக தலைவர் விஜய் 2 மாதங்கள் கழித்து காஞ்சிபுரத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசியுள்ளார். இந்த கூட்டத்தில் விஜயின் பேச்சு என்பது அர்த்தம் அற்றதாகும். பரந்தூரில் இருந்து தான் தன்னுடைய அரசியல் பயணத்தை தொடங்கியதாக விஜய் குறிப்பிட்டார். ஜனவரி 30ஆம் தேதி விஜய் பரந்தூர் சென்றுவிட்டார். அதற்கு பிறகு பரந்தூர் குறித்து அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பரந்தூரில் ஆயிரம் ஏக்கர் வரை கையகப்படுத்தப்பட்டு, இழப்பீடும் வழங்கப்பட்டு விட்டது. அப்போது விஜய் எங்கே சென்றார். அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்தும் விஜய் பேசுகிறார். ஒழுங்கு என்கிற ஒரு விஷயம் இருந்திருந்தால் கரூரில் அப்படி நடந்திருக்குமா? விஜயின் முதல் மாநாடு தொடங்கி கரூர் பொதுக்கூட்டம் வரை கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் என்ன விதமான ஒழுங்கு இருக்கிறது என்று நாங்கள் நம்ப வேண்டும். பாலாற்றில் மணல் கொள்ளை என்பது பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விஜய் இப்போது தான் விழித்துக்கொண்டு பேசுகிறார். இதன அர்த்தம் என்பது எடுத்துக்கொடுக்கும் டேட்டாவை வைத்துக்கொண்டு விஜய் அரசியல் செய்கிறார்.

இம்முறை சரியாக 2 ஆயிரம் பேரை மட்டும் கூட்டத்திற்கு அனுமதித்து சரியாக நடத்தியுள்ளனர். ஆனால் விஜய்க்கு கரகோஷம் போடுபவர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. விஜய் உற்று கவனித்தார் என்றால் நம் ஆட்களே நாம் பேசுவதை கண்டுகொள்ளவில்லை என்பது தெரியும். விஷயம் இவ்வளவுதான். விஜய், தன்னுடைய ரசிகர்களுக்கு கதை சொல்லிக் கொண்டிருக்கிறார். அரசியல் குறித்து விஜய் பேசுகிறபோது 1992ல் இருந்து இப்படி தான் நடக்கிறது என்று சொல்கிறார். மக்கள் திமுக, அதிமுக என்று மாற்றி மாற்றி தேர்வு செய்கிறார்கள். அப்படி இருக்கும்போது இருவரில் ஒருவருடன் நீங்கள் பேச்சுவார்த்தைக்கு சென்றது ஏன்? விக்கிரவாண்டி மாநாட்டில் திமுக, அதிமுகவுக்கு மாற்று என்றும், தங்களுடைய கொள்கையை ஏற்று வருபவர்களுக்கு ஆட்சியில் இடம் தருவோம் என்றும் சொன்னார்கள். ஆனால் அதிமுக உடன் ஏன் பேசினீர்கள்? விஜய் என்னிடமே பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சொன்னார். ரகசிய பேச்சுவார்த்தை நடத்திய ஒரு விஷயமே நீங்கள் நம்பகத்தன்மை அற்ற நபர் என்பதற்கு சான்று ஆகும். விஜய் நேர்மையாக கட்சி நடத்துகிறார் என்றால் ஆம் ஆத்மியை போன்று கட்சி செலவுக்கு எங்கிருந்து பணம் வருகிறது என்று சொல்லி இருக்க வேண்டும்.

திமுக விஜயை பார்த்து தற்குறி என்று சொல்வதை அவர், அவதூறு என்று நினைக்கிறார். விஜயும் சரி, கரூர் மக்களும் சரி அவர்கள் புத்திசாலியாக இருந்தால், கூட்டநெரில் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்திருக்கவே மாட்டார்கள். விஜய்க்கு உண்மையிலேயே புத்தி இருந்திருந்தால் போலீசார் சொன்ன போதே 50 மீட்டருக்கு முன்னதாக நிறுத்திவிட்டு பேசிவிட்டு போயிருப்பார்கள். மக்கள் புத்திசாலிகளாக இருந்திருந்தால் மக்கள் காலை முதலே காத்திருந்து செத்து போயிருக்க மாட்டார்கள். அப்போது நீங்கள் இருவருமே தற்குறிகள் தானே. இதில் என்ன உங்களுக்கு சந்தேகம் உள்ளது. உங்களை நாடி வந்த மக்களோ, நீங்களோ தற்குறியா? இல்லையா? உங்களுக்கு உண்மையிலேயே புத்தி இருந்தால் நீங்கள் இவ்வளவு பெரிய கூட்டத்தை கூட்டிவிட்டு, நீங்கள் கூட்டி வந்த பெரிய கூட்டத்தை வைத்து ஷுட்டிங் நடத்தி இருப்பீர்களா? குறிவைத்தால் தவறாது. தவறும் என்றால் குறியே வைக்க மாட்டேன் என்று விஜய் சொல்கிறார். குறி வைத்தால்தான் அது தவறுகிறதா? என்பதே தெரியும். இதெல்லாம் சினிமா வசனங்களை எடுத்து வைத்து பேசுவதால் தான் வருகிறது.

விஜய்க்கு ஆட்சி அதிகாரம் குறித்து எதுவும் தெரியாது. காரணம் அவர் இருந்தது கலையுலகம். அவருக்கு இருக்கும் செல்வாக்கை அரசியலாக மாற்ற தெரியவில்லை. பிறகு அவரை தற்குறி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வார்கள். பாஜகவை கொள்கை எதிரி என்று சொல்லிவிட்டு மத்திய அரசுக்கு எதிராக விஜய் என்ன செய்தார். வக்பு சட்டத்திற்கு எதிராக நாங்கள் வழக்கு தொடர்ந்தோம் என்று சொல்கிறார். நீதிமன்றத்தின் தீர்ப்பில் எந்த இடத்திலாவது தவெகவின் பெயரை குறிப்பிட்டார்களா? எல்லோருக்கும் வீடு, எல்லோருக்கும் பைக். கார் தான் எங்களுடைய இலக்கு என்று சொல்கிறார். விஜய் தன்னுடன் இருப்பவர்களுடன் சேர்ந்த ஒரு தேர்தல் அறிக்கையை தாயாரிக்கட்டும். எதையும் தெரியாமல் எழுதி கொடுப்பதை மட்டும் வைத்து பேசுகிற உங்களை நம்பி தமிழ்நாட்டு மக்கள் வாக்களிப்பார்கள் என்று நினைக்கிறீர்களா? முதலமைச்சர் குறித்து விஜய் அங்கிள், சார் என்று பேச காரணம் அவருடைய வக்கிர புத்தியாகும். ஸ்டாலினை பெருந்தன்மை உள்ளவர் போல நடிக்கிறார் என்று என்றைக்கு விஜய் சொன்னாரோ, அன்றைக்கே விஜய் எஸ்போஸ் ஆகிவிட்டார். நீங்கள் விட்டுவிட்டு சென்றபோது அவர் கரூருக்கு செறு மக்களுக்கு ஆறுதல் சொன்னார். ஆனால் அவரை பார்த்து பெருந்தன்மையாக நடிப்பதாக சொல்கிறார், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


