spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னைக்கு 50 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...

சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…

-

- Advertisement -

சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் கிழக்கு நேக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (வலுவிழந்த டிட்வா) மையம் கொண்டுள்ளது.சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்...சென்னைக்கு 50 கிமீ தூரத்தில் கிழக்கு நேக்கி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. கடலூருக்கு 160 கிமீ வடக்கு வடகிழக்கில், புதுச்சேரிக்கு 140 கிமீ வடகிழக்கிலும், ஆந்திராவின் நெல்லூருக்கு 170 கிமீ தெற்கு தென்கிழக்கிலும் மையம் கொண்டுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம். நகரும் வேகம் குறைந்து 3 கிமீ வேகத்தில் நகர்கிறது.

தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல், வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா) கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 3 கிமீ வேகத்தில் வடக்கு திசையில் நகர்கிறது. முன்னதாக மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகர்ந்த நிலையில் நகரும் வேகம் குறைந்தது.

we-r-hiring

மத்திய மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் (வலுவிழந்த டிட்வா) மையம் கொண்டுள்ளது. மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் (டிட்வா) மையப்பகுதி வடதமிழக-புதுச்சேரி கடற்கரைக்குமான குறைந்தபட்ச தூரம் 35 கி. மீ. இருந்தது. தொடர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடதமிழகம் – புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு இணையாக வடதிசையில் மெதுவாக நகரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இன்று மாலை வரை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நீடித்து, அதற்கடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு நகரும் பொழுது, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் மையப் பகுதியானது, மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து இன்று மாலை 30 கி.மீ. தொலைவிலும் இருக்க வாய்ப்புள்ளது.  தொடர்ந்து சென்னை மற்றும் ஸ்ரீஹரிகோட்டா ஆகிய இடங்களில் உள்ள டாப்ளர் வெதர் ராடார் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கனமழையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து பணிகளை உடனடியாக செய்ய வேண்டும் – முதல்வர் அறிவுரை

MUST READ