spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்புதிய ரேஷன் கார்டுக்கு லஞ்சம் வாங்கிய பெண்… லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி!!

புதிய ரேஷன் கார்டுக்கு லஞ்சம் வாங்கிய பெண்… லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி!!

-

- Advertisement -

புதிய ரேஷன் கார்டுக்கு 3 ஆயிரம் வாங்கிய பெண் ரேஷன் கடை ஊழியரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாா் கைது செயதனா்.புதிய ரேஷன் கார்டுக்கு லஞ்சம் வாங்கிய பெண்… லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி!!இராமநாதபுரம் மாவட்டம்  சாயல்குடி பகுதியை  சேர்ந்த  புகார்தாரர்  ஒருவர்( பெயர் வெளியிட விரும்பவில்லை) தனது மனைவி பெயரில் ரேசன் கார்டு வேண்டி கடந்த மார்ச் மாதம் இ-சேவை மூலம் விண்ணப்பம் செய்துள்ளார். பின்பு  ரேஷன் கார்டு தொடர்பாக கடலாடி தாலுகா அலுவலகம் சென்று  விசாரித்தபோது  இரண்டு மாதம் கழித்து உங்கள் ரேசன் கடையில் கிடைக்கும் என சொல்லி உள்ளனர்.

இந்நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு புகார்தாரர் மூக்கையூர் ரேசன் கடை  பொறுப்பாளர் முத்துலெட்சுமி (49) என்பவரை சந்தித்து தனக்கு புது ரேசன் கார்டு குறித்து கேட்டதற்கு முத்துலட்சுமி கார்டு லஞ்சம் ரூ.3500/- கொடுத்துவிட்டு வாங்கிக்கொள்ளுமாறு கூறியுள்ளார். புகார்தாரரின் மனைவிக்கு உடல் நிலை சரியில்லாததால்  அரசு காப்பீடு திட்டத்தின் கீழ்  சிகிச்சை பெற ரேசன் கார்டு தேவைப்பட்டதால் மூக்கையூர் ரேசன் கடை பொறுப்பாளர் முத்துலெட்சுமியை மீண்டும் கேட்டபோது ரூ.3000 லஞ்சமாக அரசு அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டும் என கேட்டதால், ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளாா்.

we-r-hiring

இன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ரசாயனம் தடவிய 3 ஆயிரம் ரூபாயை லஞ்சம் கொடுக்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து, கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏவிஎம் நிறுவனத்தின் பாதையை தீர்மானத்தில் சரவணனின் பங்கு அளப்பரியது – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

MUST READ