spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதுரை அருகே தங்கத்திலான ஓலை சுவடி கண்டெடுப்பு

மதுரை அருகே தங்கத்திலான ஓலை சுவடி கண்டெடுப்பு

-

- Advertisement -

மதுரை அருகே தங்கத்திலான ஓலை சுவடி கண்டெடுப்பு

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருஞானசம்பந்தர் பாடல் எழுதிய தங்க ஏடு கண்டிபிடிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் கிராமத்தில் அமைந்துள்ளது பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த பாண்டிய மன்னரால் கட்டப்பட்ட ஏடகநாதர் ஏழுவார்குழலி அம்மன் திருக்கோவில். இந்த கோவிலில் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட திருக்கோவில் ஒலைச்சுவடிகள் பாதுகாப்பு பராமரிப்பு குழுவினர் கோவிலில் ஆய்வு செய்தபோது திருஞானசம்பந்தர் எழுதிய பாடல் அடங்கிய தங்க ஏடு ஒன்றையும், கோவிலின் வரவு, செலவு கணக்குகள் அடங்கிய ஓலைச்சுவடி கட்டு ஒன்றினையும் கண்டறிந்தனர்.

we-r-hiring

இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அக்குழுவின் ஒருங்கிணைப்பாளரும், உலக தமிழ் ஆராய்ச்சி பேராசிரியருமான தாமரை பாண்டியன், “தமிழ்நாடு அரசு உத்தரவுப்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் ஓலைச்சுவடி மற்றும் செப்புப்பட்டயங்கள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். அவ்வாறு திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் மேற்கொண்ட ஆய்வில் தங்கத்தினால் ஆன திருஞானசம்பந்தர் பாடிய பாடல் பொறிக்கப்பட்ட ஓலைச் சுவடி கிடைத்துள்ளது. இது சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஓலைச் சுவடியாக இருக்கலாம். அதனை கோவில் நிர்வாகம் பத்திரமாக வைத்துள்ளது.

தமிழகத்தில் தங்க ஏடு கண்டறியப்பட்டது இதுவே முதல் முறை. தமிழகத்தில் வேறு எங்கும் தங்கத்திலான ஏடுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை திருவேடகம் ஏடகநாதர் ஏழவார்குழலி அம்மன் கோவிலில் கிடைத்தது அரியது” என தெரிவித்துள்ளார்.

MUST READ