2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக சுமார் 2 மணி நேரம் அதிமுக மற்றம் பாஜக தரப்பில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சுமார் 2 மணி நேரமாக நடைபெற்ற அதிமுக -பாஜக தலைமைத்துவ பேச்சுவார்த்தைக்குப்பின், எடப்பாடி பழனிசாமி – பியூஷ் கோயல் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல், நண்பர் மற்றும் சகோதரர் எடப்பாடி பழனிசாமியை சந்நதித்தததில் மகிழ்சி என தெரிவித்ததாா். இன்றைய சந்திப்பில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன. 2026 சட்டமன்றத் தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளதாக தெரிவித்தாா். பிரதமர் மோடியில், தலைமையின் வழிகாட்டுதலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என்று உறுதி பட தெரிவித்தாா்.

தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்பு ஆகியவற்றில் இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் என்.டி.ஏ ஆட்சி அமையும் என்றாா். தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு கடுமையாக உழைப்போம் என்றும் பியூஷ் கோயல் கூறினாா்.
அவரைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, 2026 சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்ததை நடத்தி உள்ளோம். மேலும், கூட்டணிக் கட்சிகள் எப்படி இணைந்து செயல்பட வேண்டும் என்று கருத்துகளை பரிமாறிக் கொண்டோம் என்று முடித்துக்கொண்ட அவர், அணிகள் இணைப்பு கூட்டணி விரிவாக்கம், தொகுதிப் பங்கீடு குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளிக்காமல் சென்றார்.
உங்களது அரசியல் வாழ்க்கையின் முடிவுரையை நீங்களே எழுதிக் கொள்கிறீர்கள் – எடப்பாடிக்கு முதல்வர் பதிலடி


