spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்!! காவலர் பணியிடை நீக்கம்…

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்!! காவலர் பணியிடை நீக்கம்…

-

- Advertisement -

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையைச் சேர்ந்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்!! காவலர் பணியிடை நீக்கம்…கோவை ஆர்.எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் ஷேக் முகமது பாதுகாப்பு பணிக்காக சென்னை சென்றுவிட்டு கடந்த சனிக்கிழமையன்று இன்டர்சிட்டி ரயிலில் கோவை திரும்பினார். அப்போது சென்னையில் சட்ட கல்லூரி பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி ஒருவர் ஷேக் முகமதுக்கு அருகில் அமர்ந்து கோவைக்கு வந்துள்ளார். அந்த ரயில் காட்பாடி அருகே வந்து கொண்டு இருந்தபோது அருகே அமர்ந்து இருந்த காவலர் ஷேக் முகமது அந்த மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது செல்போனில் அதை வீடியோவாக பதிவு செய்ததோடு, இது குறித்து ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஷேக் முகமதுவை காவல் துறையினர் ரயிலில் இருந்து இறக்கிவிட்டு, அந்த மாணவி கொடுத்த வீடியோ ஆதாரங்களின் பேரில் விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து அரக்கோணம் ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கோவை மாநகர காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் இருந்து ஷேக் முகமது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

we-r-hiring

ஓடும் ரயிலில் பெண்ணிற்கு காவலர் ஒருவரே பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளநிலையில் தனக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டல் குறித்து வீடியோ ஆதாரங்களுடன்  துணிச்சலுடன் புகார் அளித்ததுள்ள மாணவியை பலரும் பாராட்டி வருகின்றனர். ஏற்கனவே இளம்பெண் குளிப்பதை வீடியோ எடுத்த காவலர் மாதவ்கண்ணன் என்பவரை கோவை மதுக்கரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மேலும் ஒரு காவலர் பாலியல் சீண்டல் வழக்கில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

”கீழடி நாகரிகத்தின் உண்மை வரலாற்றை மாற்றவோ மறைக்கவோ முடியாது” – சு.வெங்கடேசன்

MUST READ