spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்போலி மருந்து விவகாரம்… ஐஎப்எஸ் அதிகாரி அதிரடி கைது…

போலி மருந்து விவகாரம்… ஐஎப்எஸ் அதிகாரி அதிரடி கைது…

-

- Advertisement -

பாஜகவில் செயல் தலைவராவதற்காக, தனது பணியை ராஜினாமா செய்த சத்தியமூர்த்தி, போலி மருந்து தொழிற்சாலையில் சிக்கி இருப்பது புதுச்சேரி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.போலி மருந்து விவகாரம்… ஐஎப்எஸ் அதிகாரி அதிரடி கைது… புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை கண்டறியப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதயம், சர்க்கரை, ரத்தகொதிப்பு நோயாளிகள் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து மாத்திரைகளை போலி மருந்து  தொழிற்சாலை மூலம் தயாரித்து நாட்டில் உள்ள 16 மாநிலங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரபல நிறுவனம் அளித்த புகாரில் புதுவை சிபிசிஐடி போலீஸார் மேட்டுப்பாளையம், திருபுவனைபாளையம், அரியாங்குப்பம் ஆகிய பகுதிகளில் இயங்கிய போலி மருந்து தொழிற்சாலைகள், 10க்கும் மேற்பட்ட குடோன்களை சோதனை செய்தனர்.

தொழிற்சாலையில் உள்ள நவீன எந்திரங்கள், பல கோடி மதிப்புகள் மருந்து, மாத்திரைகள், மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் 13 இடங்களில் சீல் வைக்கப்பட்டன. இது தொடர்பாக போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா என்ற வள்ளியப்பன், அவரது பங்குதாரர் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் மணிகண்டன், குடோன் பொறுப்பாளர் வெங்கட் மற்றும் உறுதுணையாக இருந்த ராணா, மெய்யப்பன் உட்பட 20 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

we-r-hiring

தொழிற்சாலை அதிபர் ராஜாவின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் ரூ. 2 1/2 கோடி அளவிலான பணம், நகை பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே போலி மருந்து விசாரணைக்காக போலீஸ் சூப்பிரண்டு நல்லாம்பாபு தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டது. கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவை சிபிசிஐடி போலீஸார் கடந்த புதன்கிழமை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையில் ராஜா  பல தகவல்களை தொடர்ந்து அளித்து வருகிறார். அதன்படி போலீஸார் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் பல்வேறு மாநிலங்கள சம்பந்தப்பட்ட வழக்கு என்பதாலும் மருந்து மூலப்பொருட்கள  என்பதாலும், வெளிநாட்டு பண பரிவர்த்தனை காரணங்களால் வழக்கை சிபிஐ மற்றும் என்ஐஏ விசாரணைக்கு கவர்னர் கைலாஷ்நாதன் பரிந்துரை செய்தார். ஜனவரி முதல் வாரத்தில் சிபிஐ, என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்க உள்ளனர். இந்த நிலையில் போலியாக நடத்தப்பட்ட தொழிற்சாலைக்கு  ஜிஎஸ்டி வரி எப்படி செலுத்தப்பட்டது என்ற  கேள்வியை அரசியல் கட்சியினர் எழுப்பினர்.

இதையடுத்து சிபிசிஐடி மற்றும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைதான போலி மருந்து தொழிற்சாலை அதிபர் ராஜாவிடம் ஜிஎஸ்டி வரி செலுத்தியது தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி விசாரணை நடத்தினர். ஜிஎஸ்டி வரியை செலுத்த புதுச்சேரி வனத்துறையில் பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் அதிகாரி சத்தியமூர்த்தி தனக்கு உதவி செய்ததாக கூறினார்.

மேலும், சத்தியமூர்த்தியிடம் ரூ 12 கோடி பணம் கொடுத்ததாகவும், ஐஎப்எஸ் அதிகாரி தனது அதிகாரிகள்  தொடர்பின் மூலம் உதவியதாகவும் ராஜா தெரிவித்தார். இதனிடையே அந்த அதிகாரி தலைமறைவானார். இதனையடுத்து சிபிசிஐடி, சிறப்பு புலனாய்வுக் குழுவினர் ஓசூரில் பதுங்கியிருந்த சத்தியமூர்த்தியை அதிரடியாக கைது செய்தனர். அவரை புதுச்சேரி கொண்டு வந்து விஜிலென்ஸ் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் தனக்கு நெருக்கமாக இருந்த ஜிஎஸ்டி அதிகாரிகள் பெயரை சத்தியமூர்த்தி கூறியுள்ளார். இதனையடுத்து புதுச்சேரி ஜிஎஸ்டி அலுவலகத்தில் பணிபுரியும் சூப்பிரண்டு பரிதாவிடம் விசாரணையை தொடங்கி உள்ளனர். ஜிஎஸ்டி அதிகாரியை கைது செய்ய மத்திய அரசிடம் முன் அனுமதி பெறும் முயற்சியில் சிபிசிஐடி போலீஸார் இறங்கியுள்ளனர். விரைவில் ஜிஎஸ்டி அதிகாரிகளும் இந்த வழக்கில் கைதாவார்கள் என தெரிகிறது.

யார் இந்த சத்தியமூர்த்தி?

சேலம் மாவட்டத்தை சேர்ந்த சத்தியமூர்த்தி ஐ எஃப் எஸ் அதிகாரி ஆனவுடன், புதுச்சேரி பணிக்கு வந்தார். இங்கு பல்வேறு துறையில் பணியாற்றிய அவர் பாஜக அனுதாபியாக மாறினார். இதற்கிடையில் அவர் டெல்லிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லிக்கு செல்லாமல் தனது பணியை ராஜினாமா செய்தார். பின்பு புதுச்சேரி மாநில ஆளுநர் கைலாஷன்நாதனிடம் நெருக்கம் காட்டி வந்தார். மேலும் பாஜகவின் செயல் தலைவர் பதவி அடைவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ள கொண்டு வந்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாகூரில் பிரம்மாண்டமான விழாவுக்கு ஏற்பாடு செய்து, ஆளுநர் கைலாஷநாதனை வரவழைத்து அந்த விழாவை சத்தியமூர்த்தி நடத்தினார். இதனால் ஆளுநரின் தீவிர ஆதரவாக செயல்பட்டு வந்த சத்தியமூர்த்தி, போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் கைது செய்து இருப்பது புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக தேசிய கட்சியாக இந்தியாவையே ஆண்டாளும் தமிழகத்தில் NDA கூட்டணிக்கு தலைவர் எடப்பாடி தான் – வைகை செல்வன்

 

MUST READ