spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதொடர்ந்து 10 ஆண்டாக முதலிடம்… "பிரியாணி – The G.O.A.T"…

தொடர்ந்து 10 ஆண்டாக முதலிடம்… “பிரியாணி – The G.O.A.T”…

-

- Advertisement -

தொடா்ந்து 10 ஆண்டாக பிரியாணி முதலிடத்தைப் பெற்றுள்ளது. 2025-ம் ஆண்டில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 193 பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றது.தொடா்ந்து 10 ஆண்டாக முதலிடம்… ”பிரியாணி – The G.O.A.T”…பிரியாணி என பெயரை கேட்டதுமே பலருக்கும் சாப்பிட வேண்டும் என்ற ஆசை தோன்றி விடும். அந்த அளவிற்கு இந்தியாவில் பிரியாணி பிரியர்கள் அதிகம். இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் பிரியாணி பல்வேறு முறைகளில் தயாரிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும், ஊருக்கும் ஏற்றது போல் பல வகையான பிரியாணிகள், சுவையிலும், மணத்திலும் மாறுபடுகின்றன.

பிரியாணி என்றாலே உணவு பிரியர்களுக்கு தனி மகிழ்ச்சி தான். அரிசி, மசாலா, கறி, மற்றும் வாசனை பொருட்கள் சேர்ந்து பிரியாணியை ஒரு கலைநயமான உணவாக மாற்றுகின்றன. அந்தவகையில் 2025-ம் ஆண்டு விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ள ஸ்விக்கி, ”பலருக்கும் பிடித்த பிரியாணி தொடா்ந்து 10 ஆண்டாக  முதலிடத்தைப் பெற்று வருகின்றது” என்று கூறியுள்ளது.

we-r-hiring

2025-ம் ஆண்டில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 193 பிரியாணி விற்பனை செய்யப்படுகின்றது.

2025-ம் ஆண்டின் டாப் 4 உணவுகள்

பிரியாணி 9.30 கோடி ஆா்டா்கள்
பா்கா்        4.40 கோடி ஆா்டா்கள்
பீசா          4.  1 கோடி ஆா்டா்கள்
தோசை    2. 60 கோடி ஆா்டா்கள்

உணவுப் பிரியா்களை ஈா்த்த சா்வதேச உணவுகள்

மெக்சிகன் உணவு வகைகள் 1.60 கோடி ஆா்டா்கள்
திபெத்       உணவு வகைகள் 1.20 கோடி ஆா்டா்கள்
கொரியன்  உணவு வகைகள்   47 லட்சம் ஆா்டா்கள்

மாலைப் பொழுதை இனிமையாக்கிய டீ, சமோசா

சமோசா 34 லட்சம் விற்பனையாகி அசத்தல்
டீ           29 லட்சம்  தேநீா் பாா்சல் விற்பனை

டாப் 3 வாடிக்கையாளா்கள்

ஒரே ஆா்டாில் 3 லட்சத்திற்கு உணவு வாங்கிய பெங்களூரு, மும்பை வாடிக்கையாளா்கள்

அதிக உணவு டெலிவரி  செய்து சென்னையைச் சோ்ந்த பெண் அசத்தல்

அதிகமான உணவு டெலிவரி செய்தவா்களில் சென்னையை சோ்ந்த பூங்கொடி முதலிடத்தை பெற்றுள்ளாா். 8,179 ஆா்டா்கள் டெலிவரி செய்து பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் அசத்தியுள்ளாா்.

தமிழ்நாட்டில் டிசம்பர் 29 வரை பனிமூட்டம் நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

MUST READ