தமிழ்நாட்டில் ரூ.48.76 கோடி மதிப்பீட்டில் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், ஸ்கீட் துப்பாக்கிச் சூடு பயிற்சி அகாடமி உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டினார்.


துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று சென்னை குறிஞ்சி முகாம் அலுவலத்தில், 48.76 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை, சேலம், இராமநாதபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் இயற்கை புல்வெளி கால்பந்து மைதானம், புதிய செயற்கை இழை ஓடுதள பாதை, செயற்கை இழை ஓடுதளப் பாதை மறுசீரமைக்கும் பணி, சர்வதேச தரம் கொண்ட டிராப் மற்றும் ஸ்கீட் துப்பாக்கிச் சூடு பயிற்சி அகாடமி உள்ளிட்ட விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், வனம் மற்றும் கதர்த் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், சுற்றுலாத் துறை அமைச்சர் இரா. ராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் தகாதர்பாட்சா முத்துராமலிங்கம், இ.பரந்தாமன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் அதுல்ய மிஸ்ரா, இ.ஆ.ப., தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி, இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


