spot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுமதநல்லிணக்கத்துக்காக தொடர்ந்து உழைப்பவர் காதர் மொகிதீன் - முதல்வர் புகழாரம்

மதநல்லிணக்கத்துக்காக தொடர்ந்து உழைப்பவர் காதர் மொகிதீன் – முதல்வர் புகழாரம்

-

- Advertisement -

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளாா்.மதநல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து உழைப்பவர் காதர் மொகிதீன் - முதல்வர் புகழாரம்இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் நம் அனைவரின் மரியாதைக்குரிய ‘தகைசால் தமிழர்’ பேராசிரியர் காதர் மொகிதீன் ஐயா அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வலைத்தளப்பக்கத்தில், ‘பத்திரிகையாளர், பேராசிரியர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பலநிலைகளிலும் சமூகத்துக்குப் பங்களித்து, மதநல்லிணக்கத்துக்காகத் தொடர்ந்து உழைத்து வரும் தாங்கள் நீண்டகாலம் நலத்துடன் திகழ விழைகிறேன்“ முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.

ட்விஸ்ட் வைத்த உதயநிதி! எடப்பாடி பழனிசாமியின் பலவீனம்! திருப்பரங்குன்றத்தை கைவிடும் பாஜக? அய்யநாதன் நேர்காணல்!

we-r-hiring

MUST READ