“நான் வாயை திறந்தால் சமந்தாவின் மானமே போய்விடும்” என்று தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு தெரிவித்துள்ளார்.
சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான சாகுந்தலம் படம் தோல்வியைத் தழுவியுள்ளது. இந்தப் படத்தினால் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் நடிகை சமந்தா எமோஷனல் ஆக பேசி தான் நடிக்கும் படங்களை ஓட வைக்க முயற்சிக்கிறார் அது இனிமேல் நடக்காது, அவர் சினிமா கேரியர் முடிந்துவிட்டது. ஹீரோயினாக அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. சமந்தாவால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு திரும்ப முடியாது.” என்று தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு ஒரு பேட்டியில் பேசினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் “காதுகளில் அதிகம் முடி வளருவதற்கு ஆண்மைக்கான டெஸ்டிரோன் அதிகரிப்பது தான் காரணமாக இருக்கும்” என்று கூகுள் காண்பித்த பதிலை ஸ்க்ரீன்ஷாட் எடுத்து ஸ்டேட்ஸில் வைத்தார் சமந்தா.
தயாரிப்பாளர் சிட்டி பாபுவுக்கு காதில் அதிகம் முடி இருக்கும். எனவே சமந்தா அவரைக் குறிப்பிட்டு தான் இந்தப் பதிவை வைத்துள்ளார் என்று தெளிவாகத் தெரிந்தது.
இந்நிலையில் அதுகுறித்த கேள்வி கேட்கப்பட்ட போது “என் காதுகளில் இருக்கும் முடியை பற்றி பேசாமல் என் வார்த்தையில் இருக்கும் நேர்மையை பற்றி பேசினால் நன்றாக இருக்கும். நான் மட்டும் வாயை திறந்தால் சமந்தாவின் மானமே போய்விடும்” என்றார். அவரது இந்தப் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.