தமிழ் நாட்டில் இன்றும், நாளையும் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில், அரபிக்கடல் -லட்சத்தீவு பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி நீடிக்கிறது. இது இன்று மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற இருக்கிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழ் நாட்டில் இன்றும், நாளையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை மறுநாள் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் வலுப்பெறும் புயல் சின்னம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

