சையத் முஷ்டாக் அலி, விஜய் ஹசாரே கோப்பைகளில் சதமடித்த சா்பராஸ் கான் ரஞ்சி டிராபியில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளாா்.
ரஞ்சி கோப்பை 2025-26 தொடரில் ஹைதராபாத்திற்கு எதிராக, மும்பை அணியின் நட்சத்திர வீரர் சர்பராஸ் கான் சதமடித்து அசத்தினார். ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்த போட்டியின் முதல் நாள் முடிவில், 28 வயதான அவர் 142 ரன்களுடன் ஆடமிழக்காமல் இருந்தார். ஐந்தாவது வீரராகக் களமிறங்கி சிறப்பாக ஆடினார்.
சர்பராஸ் கான் தனது 164 பந்துகளில் 11 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் சதத்தைப் பூர்த்தி செய்தார். 2019-20 சீசனுக்குப் பிறகு இவரை விட அதிக ரஞ்சி சதம் அடித்தவர்கள் அமந்தீப் காரே, அனுஸ்துப் மஜும்தார் மட்டுமே. அவரின் இந்த சிறப்பான ஆட்டம் மும்பை அணிக்கு வலு சேர்த்தது.

ஹைதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் மும்பைக்காக சா்பராஸ் கான் களமிறங்கினாா். இவா் 219 பந்துகளில் 227 ரன்கள் (19 fours , 9 Sixes) குவித்துள்ளாா். உள்ளூா் போட்டிகளில் ரன் மெஷினாக உள்ள சர்பாஸுக்கு மீண்டும் எப்போது சா்வதேச போட்டிகளில் இடம் பெறுவாா் என்ற கேள்வி எழுந்துள்ளது.


