spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…ராகுல்காந்தி கனிமொழி சந்திப்பு!

கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…ராகுல்காந்தி கனிமொழி சந்திப்பு!

-

- Advertisement -

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ராகுல் காந்தியுடன் கனிமொழி சந்திப்பு திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையேயான சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளது.கூட்டணி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி…ராகுல்கந்தி கனிமொழி சந்திப்பு!

அண்மைக்காலமாக காங்கிரஸ், திமுக நிர்வாகிகளிடையே கருத்து வேறுபாடுகள் மற்றும் வார்த்தைப்போர் முற்றிய நிலையில், இந்த உயர்மட்ட சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக, தமிழக அரசியல் சூழலில் திமுக – காங்கிரஸ் உறவு குறித்த சந்தேகங்கள் எழுந்திருந்த நேரத்தில் டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தியுடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

இந்த சந்திப்பின்போது, வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீடு, கூட்டணி ஒருங்கிணைப்பு, தேர்தல் வியூகம் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தவெக கூட்டணிக்கு காங்கிரஸ் செல்லலாம் என பேசப்பட்டு வந்த நிலையில், இந்த சந்திப்பானது திமுக – காங்கிரஸ் கூட்டணி சர்ச்சைக்கு முற்றிப்புள்ளி வைத்துள்ளது.

வேற்றுமையில்தான் இந்தியாவின் ஒற்றுமை இருக்கிறது – ராஜீவ் காந்தி பதிலடி

MUST READ