Homeசெய்திகள்கட்டுரைகுழப்பத்தை ஏற்படுத்திய காங்கிரஸ்! நடுத்தெருவுக்கு வந்த தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்

குழப்பத்தை ஏற்படுத்திய காங்கிரஸ்! நடுத்தெருவுக்கு வந்த தவெக! தராசு ஷ்யாம் நேர்காணல்

-

- Advertisement -

தேமுதிக எதார்த்தமான முறையில் இடங்களை கேட்கிறபோது திமுக, அதிமுக என ஏதேனும் ஒரு அணியில் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

தமிழக தேர்தல் களம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- 2026 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிக எந்த கூட்டணிக்கு செல்லும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதிக இடங்கள் மற்றும் ஒரு ராஜ்ய சபா இடங்கள் அக்கட்சியின் சார்பில் கேட்கப்படுகிறது. எதார்த்தமாக கேட்கிறபோது திமுக, அதிமுக என எதாவது ஒரு அணியில் சாத்தியம். கற்பனைவாதத்தில் கேட்டால் எந்த அணியிலும் சேர முடியாது. தற்போது 6 ராஜ்யசபா இடங்கள்தான் உள்ளன. இதில் 4 இடங்கள் திமுகவுக்கு. அவற்றில் 3 இடங்களை கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வழங்கிட வேண்டும். எஞ்சியுள்ள ஒரு சீட்டை காங்கிரசுக்கு தருவார்களா? அல்லது அவர்களுடைய கூட்டணி கட்சிகளுக்கு தருவார்களா? அல்லது புதிதாக வருகிற தேமுதிகவுக்கு தருவார்களா? என்கிற கேள்வி எழுகிறது. எனக்கு தெரிந்து தேமுதிகவுக்கு அந்த இடத்தை தரும் வாய்ப்புகள் இல்லை. அதிமுகவிடம் 2 ராஜ்யசபா இடங்கள் தான் உள்ளது. ஒன்று பாமவுக்கு ஒதுக்கப்பட உள்ளதாக தெரிகிறது. மற்றொன்று தேமுதிகவுக்கு கொடுத்துவிட்டு அதிமுகவில் குழப்பம் ஏற்பட எடப்பாடி விரும்ப மாட்டார். எனவே தேமுதிகவுக்கு ராஜ்யசபா இடம் தர வழியில்லை.

தேமுதிகவை பொறுத்தவரை 0.5 சதவீதம் வாக்குகளுக்கு, அதிகபட்சமாக 6 இடங்கள் வரை வாங்குவது மட்டும்தான் சாத்தியமானது. அதற்கு மேல் அவர்கள் எதிர்பார்ப்பது வீண். அது எதற்காக இடம் தருவார்கள் என்றால்? 30 முதல் 40 தொகுதிகள் வரை ஆயிரம் வாக்குகள் விசத்தியாசத்தில் வெற்றி, தோல்வி நிர்ணயக்கப்படுகிறது. அந்த இடங்களில் தேமுதிக கூட்டணியில் இருந்தால் சரியாக இருக்கும் என்ற அடிப்படையில் 5 இடங்கள் தரலாம் என நினைப்பார்கள். பார்முலா படி கூட்டணி கட்சிகளுக்கு அதிக இடங்கள் கொடுத்தால், பலவீணமாகி விடுவார்கள். காங்கிரஸ், தவெக கூட்டணி விவகாரத்தில் திமுக கரார் ஆகவே இருந்துள்ளது. அவர்கள் நினைத்திருந்தால் காங்கிரசிடம் இவ்வளவு இடங்கள் தான் தர முடியும். 2029 மக்களவை தேர்தலின்போது கூடுதல் இடங்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று சொல்லி இருக்கலாம். ஏற்கனவே அப்படி சொல்லிய கட்சி தான் திமுக. ஆனால் இம்முறை அவர்கள் சொல்லவில்லை. காரணம் போனால் போகட்டும் என்பதுதான்.

காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர்கள்

கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களை தாண்டி காங்கிரசுக்கு தொகுதிக்கு 3000 முதல் 5000 வாக்குகள் தான் இருக்கும். அந்த வாக்குகளை இழந்தால், மற்ற கட்சிகளை சேர்ப்பதன் மூலம் சரிகட்டி விடலாம். காங்கிரசின் பலம் என்பது 20 முதல் 25 இடங்கள் தான். அதில் கூட கொஞ்சம் குறைக்கலாம் என திமுக நினைக்கலாம். திமுக 160 இடங்களுக்கு கீழ் நிற்க முடியாது. காங்கிரசுக்கு கூடுதல் இடங்கள் கொடுத்தால், மற்றக்கட்சிகளும் இடங்களை தர வேண்டிய நிலை ஏற்படும். இதுமட்டுமின்றி அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எவ்வளவு இடங்கள் தருகிறதோ, அதனை ஒட்டியே காங்கிரசுக்கு இடம் தருவார்கள். ஒரு வருடத்திற்கு முன்பே கூட்டணி சேர்ந்த பாஜகவுக்கே, அதிமுக இன்னும் தொகுதிகளை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று சொல்வதில் ஏற்புடையது அல்ல. கிரிஷ் ஜோடாங்கர் மரியாதை நிமித்தமாக முதல்வர் மு.க.ஸ்டாலினை பார்க்க வந்துள்ளார். அப்போது 70 தொகுதிகளின் பட்டியலை திமுகவிடம் வழங்கியுள்ளார். அதோடு இருகட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் நின்றுவிட்டன. தற்போதே எந்த எந்த தொகுதிகள் என்று எல்லோருக்கும் சொல்வது சாத்தியமில்லை. அதன் பிறகும் காங்கிரஸ் கட்சியினர் பேசினால் கூட்டணியை விட்டு செல்வதென்றால் போகலாம் என்று சொல்லிவிட்டனர்.

சட்டம் ஒழுங்கை காக்கத் தவறிய திமுக அரசு - விஜய் ஆவேசம்

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டது தவெக தான். காங்கிரசை நம்பி தான், அவர்கள் அ.ம.மு.க உடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை எல்லாம் கோட்டை விட்டனர். தவெக – அமமுக கூட்டணி ஏற்பட்டுவிடும் என்று தான் எல்லோரும் நினைத்தனர். அமமுக தொண்டர்களும் அதையே விரும்பினார்கள். அமமுக தரப்பில் பல முறை பேசினார்கள். விஜய் தரப்பில் செங்கோட்டையன் பேசினார். ஆனால் விஜயிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. காங்கிரஸ் கூட்டணிக்கு வந்ததும் அவர்களுக்கு தொகுதிகளை இறுதிசெய்துவிட்டு மற்றவர்களுக்கு இடங்களை பிரிக்கலாம் என்று இருந்தார்கள். பாஜகவும் விஜய் வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து காத்திருந்தது. காங்கிரஸ் செய்த குழப்பம் காரணமாக தவெகவையும் ஒழித்தாகிவிட்டது, பாஜகவையும் ஒழித்தாகிவிட்டது. அதிமுகவை குழப்பத்தில் ஆழ்த்திவிட்டனர். அமமுகவை டிராக்கில் விட்டனர். அதை திமுக உள்ளுர ரசிக்கவே செய்கிறது.

ஓபிஎஸ் இந்த குழப்பத்தில் மாட்டி எந்த பக்கமும் போக முடியாமல் நிற்கிறார். அவரிடம் யாருமே இல்லை. சமுதாய வாக்குகள், சமுதாய தலைவருக்கு இருக்கும். ராமதாஸ் வன்னியர்களுக்கு செய்துள்ளார். ஆனால் ஓபிஎஸ் தனது சமுதாயத்திற்கு என்ன செய்தார்? முக்குலத்தோர் இளைஞர்களின் அடையாளமாக திகழ்ந்த தினகரன், எடப்பாடியுடன் சேர்ந்ததால் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள். இன்றைய தேதிக்கு தேவர் சமுதாயம் எடப்பாடி எதிர்ப்பில் தான் உள்ளனர். எனவே வேட்பாளர் தேர்தவில் அதிமுக, திமுகவில் பழைய குழப்பங்கள் எல்லாம் தொடரும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ