spot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அன்புமணி மருத்துவரை பார்த்து இணக்கமாக இருக்க நான் தடையாக இருப்பேனா? – ஜி.கே.மணி கேள்வி

அன்புமணி மருத்துவரை பார்த்து இணக்கமாக இருக்க நான் தடையாக இருப்பேனா? – ஜி.கே.மணி கேள்வி

-

- Advertisement -

திண்டிவனம், தைலாபுரம் இல்லத்தில் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே.மணி பேட்டியளித்துள்ளாா்.அன்புமணி மருத்துவரை பார்த்து இணக்கமாக இருக்க நான் தடையாக இருப்பேனா? – ஜி.கே.மணி கேள்விநடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட  விருப்ப மனு அளிக்கப்பட்டதில் பாமகவிற்கு இதுவரை இல்லாத அளவிற்கு 4109 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. மருத்துவர் ராமதாஸ் தலைமையில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது என்றும் தேர்தலில் வெற்றி என்பது கட்சியின் பலம்  கட்சியை வழிநடத்தும் தலைவரின் சக்தி அதையும் தாண்டி கூட்டணி அமைப்பது  தொகுதி வேட்பாளர்களுக்கு உரிய முக்கியத்துவம் இதெல்லாம் சேர்ந்தது தான் வெற்றி.

பாமக ஒரு நெருக்கடியான சூழலை சந்தித்தாலும் கூட மருத்துவர் ராமதாஸ் மீது கிராமத்தில் உள்ள அடித்தட்டு மக்கள் மருத்துவர் ராமதாஸ் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என நினைத்துள்ளனர். இது மருத்துவர் ராமதாஸ் மிகப்பெரிய வெற்றியைத் தரும் என்ற நம்பிக்கை உள்ளது.

we-r-hiring

கூட்டணி தொடர்பாக முடிவு எடுக்க பொதுக்குழு மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அதை தொடர்ந்து மூன்று முறை நிர்வாகக் குழு நடைபெற்று உள்ளது. முடிவுகளை காலதாமதம் ஆவதற்கு காரணம் நல்ல முடிவாக, வெற்றி பெறக்கூடிய கூட்டணியாக இருக்க வேண்டும். மருத்துவர் ராமதாஸ் இடம்பெறும் கூட்டணி தான் ஆட்சி பிடிக்க வேண்டும் என்பதற்காக அலசி, ஆராய்ந்து யோசனை செய்து வருகிறார். விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார்.

சில கட்சிகள் தலைமையுடன் நேரடியாக பேசுவார்கள், சில சமயங்களில் நபர்கள் மூலம் பேசுவார்கள் இயல்பானது. இறுதி முடிவை மருத்துவர் ராமதாஸ் அறிவிப்பார். கூட்டணி அமைப்பதில் சிக்கல் இல்லை. வெற்றி கூட்டணியை கண்டறிவதை தவிர வேறு எந்த சிக்கலும் இல்லை. மாம்பழ சின்னம் குறித்து மிக விரைவில் தெளிவான முடிவை அறிவிப்போம்.

எல்லா தரப்பிலிருந்து பேச்சுவார்த்தை நடைபெற்ற வருகிறது. ஒரு நல்ல முடிவுக்காக தாமதமாகிள்ளது. தேர்தல் நேரத்தில் ஒவ்வொருவரும், ஒவ்வொரு கருத்தை கூறுவார்கள். இன்னொருவர் கருத்துக்கு நான் பதில் சொல்ல முடியாது. இது குறித்து நீங்கள் அவரிடம் தான் கேட்க வேண்டும். திருமாவளவனை சமாதானம் செய்ய பாமக செயல்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், அது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பதில் அளித்தார்.

தேர்தல் நேரத்தில் நம்முடைய கருத்து நேரிடலையோ, சிக்கலையோ ஏற்படுத்தக் கூடாது. நல்ல கூட்டணி அமைக்க வேண்டும். பாமக வெற்றி பெற வேண்டும். கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும். என்பதுதான் எங்கள் நோக்கம். மருத்துவர் ராமதாசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு ஜிகே.மணி தான் காரணம் தான் என கூறி வருகிறார்கள். இருவரையும் இணைக்க ஐந்து மாதங்களாக மேற்கொண்டேன் அது நடக்கவில்லை என்கிற வருத்தம் தனக்கு உள்ளது. அன்புமணி மருத்துவரை பார்த்து இணக்கமாக இருக்க நான் தடையாக இருப்பேனா என கேள்வி எழுப்பினர். இருவரும் ஒன்றாக சேர வேண்டும் என நினைப்பதில் முதல் ஆள் நான் தான். கனத்த இதயத்தோடு வாழ்ந்து வருகிறேன் என்று பதிலளித்தாா்.

விரைவில் வேலூரில் பிரச்சாரம் நடத்த விஜய் திட்டம்….

MUST READ