Homeசெய்திகள்தமிழ்நாடுகருத்து வேறுபாடு துரோகம் அல்ல…ஜனநாயகத்தின் வலிமை - ராகுல் காந்தி பேச்சு தடைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

கருத்து வேறுபாடு துரோகம் அல்ல…ஜனநாயகத்தின் வலிமை – ராகுல் காந்தி பேச்சு தடைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

-

- Advertisement -

தலைவர் ராகுல் காந்தியின் பேச்சை நாடாளுமன்றத்தில் தடை செய்ததற்கு கடும் கண்டனம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.கருத்து வேறுபாடு துரோகம் அல்ல…ஜனநாயகத்தின் வலிமை - ராகுல் காந்தி பேச்சு தடைக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ”மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேச்சைத் தடை செய்த நடவடிக்கை, இந்திய ஜனநாயகத்தின் அடிப்படையான கருத்துச் சுதந்திரத்துக்கும் நாடாளுமன்ற மரபுக்கும் எதிரானது.

we-r-hiring

மக்களின் குரலை நாடாளுமன்றத்தில் பிரதிபலிக்க வேண்டிய எதிர்க்கட்சியின் உரிமையை பறிப்பது, அதிகாரத்தை விமர்சனத்திலிருந்து காப்பாற்றும் முயற்சியாகும். இது ஜனநாயகத்தில் ஆரோக்கியமான விவாதத்தையும், பொறுப்புணர்வையும் அடக்கும் செயலாகும்.

ஒன்றிய பாஜக அரசு விமர்சனங்களை ஏற்கத் தயாராக இருக்க வேண்டும். கருத்து வேறுபாடு துரோகம் அல்ல. அது ஜனநாயகத்தின் வலிமை. ராகுல் காந்தி அவர்களின் பேச்சைத் தடை செய்த இந்த நடவடிக்கையை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்றும், இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க, கருத்துச் சுதந்திரத்தை உறுதி செய்ய, இத்தகைய அடக்குமுறைகளை மக்கள் ஒருமித்த குரலில் எதிர்க்க வேண்டும்” என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் விவகாரம் – மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வெளிநடப்பு!!

MUST READ