spot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை

ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை

-

- Advertisement -

தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளாா்.ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசைசென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஐந்து வெள்ளி கிரீடங்கள்(10 kg வெள்ளி), 500 கிராம் தங்கம் ஆகியவை கொள்ளை போனது. யானைக்கவுனி போலீசார் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது முகத்தில் துணி கட்டியபடி செல்போன் டார்ச் லைட் வெளிச்சத்தில் ஒரு நபர் கொள்ளையடித்து விட்டு எழும்பூர் ரயில் நிலையம் சென்றது தெரிய வந்தது. அங்கு தனது ஆடைகளை மாற்றி சாமியார்கள் அணியும் ஆடைகளை அணிந்து கொண்டு நாசிக் செல்லும் ரயிலில் தப்பியது தெரிய வந்தது. போலீசார் பின் தொடர்ந்து சென்றும் அந்த நபரை பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் கச்சிகுடாவில் ஒரு ஜெயின் கோயிலில் இதே போல கொள்ளை நடந்துள்ளது. ஜெயின் கோயில்களில் தொடர்ந்து கொள்ளை சம்பவம்

we-r-hiring

நடைபெறுவதால் ஜெயின் சங்கத்தினர் தங்கள் வாட்ஸ் அப் குழுக்களில் கச்சிகுடா ஜெயின் கோயிலில் கொள்ளையன் கைவரிசை காட்டி விட்டு சென்ற சிசிடிவி  பதிவுகளை போட்டிருந்தனர். காவல்துறை அதிகாரிகளுக்கும் இதை அனுப்பி இருந்தனர். இதில் சௌகார்பேட்டை, கச்சிகுடாவில் கைவரிசை காட்டியது ஒரே நபர் என தெரிய வந்தது. சென்னை யானை கவுனி காவல் ஆய்வாளர் அழகம்மாள் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் லோனிகந்த் வனப்பகுதியோரம் வசித்த ஜீவன் சிங்(60) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு தகவல்கள் வெளியானது.

தமிழகத்தில் 2024ல்செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி சேலம் செவ்வாய்பேட்டை, 2021-ல் கர்நாடக மாநிலம் குல்பர்கா அருகே உள்ள பசன பாகவாடி, பெங்களூர் ஆகிய ஊர்களில் ஜெயின் கோயில்களில் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டார். பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட ஜீவன் சிங்கின் மூதாதையர்கள் கர்நாடக மாநிலம் குல்பர்காவில் குடியேறியுள்ளனர். உல்லாச பேர்வழியான ஜீவன் சிங்குக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த பிறகுதான் தனக்கு எச் ஐ வி தொற்று இருப்பது தெரிய வந்தது. மருந்து மாத்திரைகள் வாங்குவதற்காகவும், இரண்டு பிள்ளைகளுக்கு சொத்து சேர்த்து கொடுக்க வேண்டும் என்பதற்காகவும் திருட்டுத் தொழிலில் இறங்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது.

கர்நாடகாவில் ஜெயின் கோயில்களில் கொள்ளையடித்த  வழக்குகளில் கைதாகி ஜீவன் சிங் சிறையில் இருந்துள்ளார்.போலீசரின் தொடர் நெருக்கடி காரணமாக அங்கிருந்து மராட்டியத்துக்கு இடம் பெயர முடிவு செய்தார். இதற்காகவே தமிழகம் வந்து ஜெயின் கோயில்களில் கைவரிசை காட்டியுள்ளார். சௌகார்பேட்டை ஜெயின் கோயிலில் கொள்ளை அடித்த நகைகளை நவி மும்பை அடுத்த பேலாப்பூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ராஜ்பாவ் ரத்தோர் என்பவரிடம் கொடுத்து, இடம் கேட்டுள்ளார்.  அவர் இது போதாது இன்னும் நகை பணம் கொண்டு வந்தால் தான் இடம் தருவேன் என கூறியதை அடுத்து தெலுங்கானா மாநிலம் கட்சிக்குடாவில் ஜீவன் சிங் கைவரிசை காட்டியுள்ளார்.

புனே மாவட்டம் லோனி கந்த் பகுதியில் ராஜ் பாவ் ரத்தோர் கொடுத்த இடத்தில் அடுத்தடுத்து மூன்று ஹாலோ பிளாக் வீடுகள் கட்டியுள்ளார். இரண்டு வீடுகளை பிள்ளைகளுக்கு கொடுத்துள்ளார். ஒரு வீட்டில் இவரும், இவரது மனைவியும் வசிக்கின்றனர். எச்ஐவி தொற்று உள்ளவர் என்பதால் வீட்டுக்குள் உறங்க இவரது மனைவி அனுமதிக்க மாட்டாராம். வீட்டு வாசலில் தான் ஜீவன் சிங் உறங்குவாராம். ஜீவன் சிங் கொடுத்த தகவலின் பேரில் எஸ்டேட் அதிபர் ராஜ் பாவ் ரத்தோரையும் சென்னை போலீசார் கைது செய்து புனே நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். ஜீவன் சிங்குக்கு மட்டும் டிரான்ஸ்சிட் வாரண்ட், கொடுத்த நீதிபதி ராஜ்பாவ் ரத்தோரை ஜாமீனில் விடுவித்தார்.

இதையடுத்து ஜீவன் சிங்கை சென்னை அழைத்து வந்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஜீவன் சிங் கைதான தகவல் தெரிந்த செங்கல்பட்டு மற்றும் சேலம் போலீசார் அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

2500 கோடி ரூபாய் மோசடி…எங்கள் சொத்து மதிப்பு ஜூரோ…புலம்பும் குடியிருப்பு வாசிகள்…

 

MUST READ